மின்சார வாரியம் அதிரடி.. சரியாக வேலை செய்யாத பொறியாளர்கள் சஸ்பென்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் மின்சார வாரியத்தில் சரிவரப் பணி மேற்கொள்ளாத 2 பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்து, அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இப்போது மழைக் காலமாகும். கடந்த சில வாரங்களாகவே மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று கூட மேக வெடிப்பு காரணமாகச் சென்னையில் திடீரென கன மழை கொட்டி தீர்த்து.

மழைக் காலம் என்றால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது வாடிக்கையான ஒன்று தான். மின்வாரிய ஊழியர்கள் மழைக் காலத்தில் விரைந்து செயல்படவில்லை என்றால், பல மணி நேரம் வரை கூட மின்வெட்டு தொடரும் சூழலும் ஏற்படும்.

ஆய்வுக் கூட்டம்

ஆய்வுக் கூட்டம்

இந்நிலையில், மின்சார வாரியத்தில் சரிவரப் பணி மேற்கொள்ளாத 2 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 08102023 அன்று சென்னை கலைவாணர் அரக்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

ஆய்வு

ஆய்வு

இக்கூட்டத்தில் தலைமை பொறியாளர்கள்/ சென்னை வடக்கு சென்னை/தெற்கு வடக்கு, மத்திய மேற்கு, தெற்கு-1, தெற்கு-2 மின் பகிர்மான வட்டங்கள் தொடர்புடைய மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் ஆகியோர்களிடம் இதுவரை மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன

பணி இடை நீக்கம்

பணி இடை நீக்கம்

இந்த ஆய்வின்படி சரிவரப் பணி மேற்கொள்ளாத சென்னை வடக்கு புதுவண்ணாரப்பேட்டை மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த இளநிலை பொறியாளர்/முதல்நிலை எம். சண்முகம் மற்றும் சென்னை தெற்கு (இரண்டு) மின்பகிர்மனை வட்டத்தைச் சேர்ந்த உதவி மின் பொறியாளர் (அப்போதைய உதவி மின் பொறியாளர் வி. மகேஷ்வரி ஆகிய இருவரும் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.

மின்வெட்டுக்கு வாய்ப்பில்லை

மின்வெட்டுக்கு வாய்ப்பில்லை

நாடு முழுவதும் தற்போது நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, ஜார்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் மின்வெட்டு பிரச்சினை தொடங்கிவிட்டன. இதே நிலைதான் வரும் காலத்தில் தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களிலும் இதே நிலை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரிக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+