திருச்சி டிரிப் முடிந்ததும்.. அதிமுகவிற்கு "பொங்கல்" வைக்கும் மோடி.. அந்த 2 தலைகளுக்கு குறி.. உடையுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பெரிய ஆபரேஷன் ஒன்றை டெல்லி பாஜக கையில் எடுத்துள்ளதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார். இஸ்லாமியர்களே.. நீங்கள் ஆசைப்பட்டது போல.. நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே அதிமுக தனியாக வந்துவிட்டது. பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு அதிமுக தனியாக வந்துவிட்டது. இனி நாங்கள் தனியாகவே கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அப்போதே அவரின் பிளான் தமிழ்நாடு அரசியலில் பலருக்கும் தெரிந்துவிட்டது.

 2 EX Ministers are controlling Edappadi Palanisamy: Modi to take major decision after the Trichy trip

இஸ்லாமியர்களை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி தீவிரமாக முயல்கிறாரோ.. அதுதான் அவரின் திட்டமோ என்ற கேள்வி எழுந்தது.

மோடி வருகை: இந்த நிலையில்தான் சமீபத்தில் திருச்சி விமான நிலையம் உட்பட திருச்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில். 2024-ம் ஆண்டின் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி. தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு ரூ.20,000 கோடி திட்டங்கள் தொடக்கம்.. எனது தமிழ் குடும்பமே முதலில் உங்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பலர் உயிரிழந்தனர். 2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது.

விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்னர் காலமானார். சினிமாவில் மட்டும் கேப்டன் விஜயகாந்த் அல்ல அரசியலிலும் கேப்டன். விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். பொருளாதார, கலாசார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு உள்ளது, என்று திருச்சி பயணத்தில் மோடி கூறினார்.

மோடி - எடப்பாடி மோதல்: தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை . இதனால் டெல்லி பாஜக எடப்பாடி மீது அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

பொதுவாக மோடி தமிழ்நாடு வரும் போதெல்லாம் எடப்பாடி சந்திப்பது வழக்கம். சண்டை போட்டு நேரம் வாங்கி குறைந்தபட்சம் விமான நிலையத்திலாவது பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிடுவார். ஆனால் இந்த முறை எடப்பாடி அப்படி சந்திப்பு நடத்தவில்லை.

கட்சி எப்படி?: இந்த நிலையில்தான், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பெரிய ஆபரேஷன் ஒன்றை டெல்லி பாஜக கையில் எடுத்துள்ளதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை கண்ட்ரோல் செய்வதே 2 பேர்தான் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நம்மிடம் பேசிய அதிமுக தலைகள் சிலர்.. லோக்சபா தேர்தல் நெருங்கும் போது அதிமுக - பாஜக இணைய வேண்டும் என்று அதிமுகவிலேயே சிலர் நினைக்கின்றனர். கொங்கு மண்டலத்தை சேர்ந்த விஐபி எம்எல்ஏ ஒருவர் அதில் தீவிரமாக இருக்கிறார். கொங்கில் அதிமுக - பாஜக பிரிந்து நின்றால் அது திமுகவிற்குத்தான் சாதகமாக மாறும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதுதான் நடந்தது.

அதனால் அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமையும். இதனால்தான் அவர்கள் மீண்டும் சேருவார்கள் என்று நான் கூறுகிறேன். மோடி வேண்டாம் என்பது திமுக வாதம்.. மோடிதான் வேண்டும் என்பது பாஜக வாதம். அப்படி இருக்க அதிமுக எதை சொல்லி வாக்கு கேட்கும் என்பதால் அதிமுக - பாஜக இணைய வேண்டும் என்று அதிமுகவிலேயே சிலர் நினைக்கின்றனர்.

தேர்தல் நெருங்கும் போது அதிமுக - பாஜக சேர வேண்டிய கட்டாயம் உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் போது அதிமுக - பாஜக இணைய வேண்டும் என்று அதிமுகவிலேயே சிலர் நினைக்கின்றனர். கொங்கு மண்டலத்தை சேர்ந்த விஐபி எம்எல்ஏ ஒருவர் அதில் தீவிரமாக இருக்கிறார் என்று கூறுகின்றனர்.

புல் கன்ட்ரோல்: ஆனால் இதை வேறு சில அதிமுக தலைகள் தடுக்கிறார்களாம். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை கண்ட்ரோல் செய்வதே 2 பேர்தான் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இரண்டு பேர்தான்.. பாஜகவோடு கூட்டணி வேண்டாம். நாங்கள் சொல்வதை கேளுங்கள்.

பாஜகவுடன் இருந்தால் நமக்குத்தான் சிக்கல் என்று அந்த 2 பேர் எடப்பாடியை கட்டுப்படுத்துகிறார்களாம். அதோடு இல்லாமல்.. மாவட்ட செயலாளர்கள் நியமனம், பல்வேறு நிர்வாகிகள் நியமனம் என்று அனைத்திலும் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவிற்கு பின் இவர்கள்தான் இருக்கிறார்களாம். அதாவது இவர்கள் சொல்வதை கேட்டுத்தான் எடப்பாடி முடிவு எடுக்கிறாராம். இவர்களை தட்டி தூக்கத்தான் டெல்லி திட்டமிட்டுள்ளதாம்.

குறி வைக்கும் அமித் ஷா: இந்த விவகாரத்தில் விரைவில் பாஜக முடிவு எடுக்கும் என்கிறார்கள். பாஜகவிற்கு எதிராக எடப்பாடியை வழிநடத்தும் அந்த 2 பேரை பாஜக எப்போது வேண்டுமானாலும் குறி வைக்கும். அது மோதலை பெரிதாக்கும் . ஏன் அதிமுகவை கூட உடைக்கும் நிலை ஏற்படும் என்று பாஜகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+