கோயில் கழிவறைக்குள் சென்ற 2 பெண்கள் வெளியே வரல.. அந்த செல்போனை பார்த்ததுமே ஆடிப்போன குஜராத் போலீஸ்
சென்னை: குஜராத் கோவில் கழிவறையில் இரு சிறுமிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.. இது தொடர்பாக விசாரணையை போலீசார் மேற்கொண்டபோதுதான் அந்த மர்மம் விலகியது.. அவர்களின் செல்போனை ஆய்வு செய்த போலீசாருக்கு காத்திருந்தது யாரும் எதிர்பார்க்காத ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.. என்ன நடந்தது 2 சிறுமிகளுக்கும்? யார் அவர்கள்?
குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் உள்ளது அந்த பிரபலமான கோவில்.. சம்பவத்தன்று, அந்த சிறுமிகள் 2 பேரும் கோவிலுக்கு சென்றுள்ளனர்.. அவர்கள் 2 பேரும் ஒரே நேரத்தில் கோயில் வளாகத்தில் இருந்த பாத்ரூமுக்கு சென்றுள்ளனர்.. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அங்கிருந்தவர்களுக்குச் சந்தேகம் வந்தது..

குஜராத் கோயில் கழிவறை
உடனே கோவில் ஊழியர்களும் மற்றவர்களும் உள்ளே சென்று பார்த்தபோது, சிறுமிகள் இருவரும் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்..
உடனே போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.. போலீசார் வந்து சிறுமிகளின் உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. உயிரிழந்த அந்த 2 சிறுமிகளும் நெருங்கிய நண்பர்கள் என்று தெரியவந்துள்ளது.. .
இந்த மரணங்கள் குறித்து ஆரம்பத்தில் விசாரித்தபோது, அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர்.. ஆனால், இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வரும் நிலையில், அவர்களது சோஷியல் மீடியா பக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன..
2 சிறுமிகள் யார்
அப்போது அவர்களுடைய இணையதளத் தேடல் குறித்த தகவல்கள் சில கிடைத்துள்ளன.. இது இந்த வழக்கில் ஒரு முக்கியமான மாற்றமாக அமைந்துள்ளது.. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த 2 சிறுமிகளும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக, கூகுளில் உயிரை மாய்ப்பதற்கான பல வழிகள் குறித்து தேடியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. அவர்கள் கடந்த சில நாட்களாகவே ஏதோ ஒரு மன வருத்தத்தில் இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
சைபர் கிரைம் போலீசார் அந்த சிறுமிகளின் செல்போன்களை வாங்கி ஆய்வு செய்தபோது, "தற்கொலை செய்வது எப்படி?", "வலி இல்லாமல் உயிர் விடுவது எப்படி?" என்பது போன்ற கேள்விகளை அவர்கள் கூகுளில் அடிக்கடி தேடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இந்தத் தகவல்கள் மூலம், அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது..
செல்போனில் கூகுளில் தேடல்
இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. யாராவது இவர்களை மிரட்டினார்களா அல்லது குடும்பத்தில் ஏதாவது பிரச்சனையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்..
இவ்வளவு சிறிய வயதிலேயே இப்படி ஒரு முடிவை அவர்கள் எடுத்தது அப்பகுதி மக்களிடையே அதிர்வலையை உண்டு பண்ணி வருகிறது.. போலீசார் இந்த வழக்கை முழுமையாக விசாரித்து வருகிறார்கள்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகுதான் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற முழு உண்மை தெரியவரும்..
பக்தர்கள் அதிர்ச்சி
ஒரு புனிதமான கோவில் வளாகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பக்தர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும் என்றும், அவர்கள் இணையதளத்தில் எதைப் பார்க்கிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்..












Click it and Unblock the Notifications