அண்ணாமலையின் தூண்டிலில் மாட்டும் மீன்கள்.. பக்கா ப்ளானில் பாஜக.. அதிர்ந்து பார்த்த எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவின் தேர்தல் வேகம் சூடுபிடிக்க துவங்கிவிட்டது.. இன்றும், நாளையும், மாநில தலைவர் நடைபயணம் மேற்கொள்ளும் நிலையில், திமுக, அதிமுக கட்சிகளின் மொத்த கவனமும் கொங்குவில் குவிந்து வருகிறது.

"இங்கு தோசையோ, இட்லியோ, சப்பாத்தி சுடவோ அண்ணாமலை வரவில்லை. எப்போதும் என்னுடைய தலைமைப் பண்பு ஒரு மேனேஜரைப் போல இருக்காது. மேனேஜர் போல தாஜா வேலை எல்லாம் செய்யமாட்டேன். நான் தலைவன். ஒரு தலைவன் எப்படியிருக்க வேண்டுமோ அப்படித்தான் இருப்பேன். நான் எடுக்கும் சில முடிவுகள், சிலருக்கு அதிர்ச்சியளிக்கத்தான் செய்யும். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டே இருக்க வேண்டும்" என்று தமிழக பாஜக தலைவர் ஒருமுறை கூறியிருந்தார்.

 2 Huge Plans of TN BJP Annamalai and Will Edappadi Palaniswami retain AIADMK dissidents

ஏன் சைலண்ட்: இப்படியெல்லாம் பேசிய அண்ணாமலையா, இப்போது அமைதி காக்கிறார்? எடப்பாடி பழனிசாமி குறித்தோ, அதிமுக குறித்தோ, கூட்டணி முடிவு குறித்தோ, இதுவரை எந்த கருத்தையும் சொல்லவில்லையே ஏன்? மாநில பாஜக தலைவர்கள் கூட, அதிமுகவை விமர்சிக்காமல் உள்ளனரே? என்ன காரணம்? என்பன போன்ற குழப்பமெல்லாம் தமிழக அரசியல் களத்தை பீடித்தபடியே உள்ளன.

மாநில தேர்தல்கள்: தேர்தலுக்கு இன்னும் டைம் இருப்பதால், இப்போதைக்கு அதிமுக விவகாரத்தை கண்டு கொள்ள வேண்டாம் என்றம், அதிமுகவை விட்டுப்பிடிப்போம், அதுவரை மற்ற வேலைகளை பார்ப்போம் என்று மேலிட பாஜக அறிவுறுத்தியதால்தான், கமலாலயதில் இந்த அமைதிப்போக்கு நீடிப்பதாக சொல்கிறார்கள். 5 மாநில தேர்தல் பிஸியில் தலைவர்கள் இருப்பதால், அந்த தேர்தலுக்கு பிறகுதான் தமிழக அரசியலில், டெல்லியின் கவனம் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், அண்ணாமலை தன்னுடைய அடுத்த அதிரடியை கையில் எடுத்துவிட்டார். அடுத்தக்கட்ட நடைபயணம் பெரும் வரவேற்பை பெற்று தந்து கொண்டிருக்கிறது.. இதோ இப்போதுகூட, ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் 2 நாள் நடைபயணம் மேற்கொள்கிறார். முதல்கட்ட நடைபயணத்தைவிட, இரண்டாம் கட்ட நடைபயணத்தில் அண்ணாமலையின் கவனம் சற்று அதிகமாகி உள்ளதாக தெரிகிறது.

அதிமுக, திமுக: தன்னுடைய சொந்த கொங்கு மண்டலம் என்பதுடன், அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சேர்த்து ஒரு "செக்" வைக்கவே, இந்த மும்முரத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. அதனால்தான், அதிமுக தரப்பில் உள்ள சில தலைவர்கள் மீதும் பாஜகவின் பார்வை விழுந்துள்ளதாக தகவல் கிடைக்கின்றன.

காரணம், பாஜகவுக்கு எதிர்ப்பு + பாஜகவுக்கு ஆதரவு என்ற 2 விதமான டீம்கள் அதிமுகவுக்குள்ளேயே இருக்கின்றன.. இதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்க போகிறது என்கிறார்கள்.

முதல் வெற்றி: ஏற்கனவே, சில அதிமுக முன்னாள்கள், பாஜக பக்கம் தாவ போவதாக தகவல்கள் வந்தன.. சில தலைவர்கள் அதிருப்தியிலும், வருத்தத்திலும் உள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனாலும், இதுவரை யாருமே, அதிமுகவைவிட்டு வெளியேறவில்லை என்பதே, எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

எனினும், மேலிட பாஜக தன்னுடைய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது.. தமிழக பாஜகவில் உள்ள சில சீனியர் முக்கிய அசைன்மென்ட் தரப்பட்டுள்ளதாம்.. அவர்கள் இப்போது தமிழகம் முழுதும் தங்கள் பணியை துவக்கிவிட்டதாக தெரிகிறது. அதில் ஒன்றுதான், அதிமுகவில் தூண்டிலை வீசுவது.

என்ன முடிவு: அதிமுக முன்னணி தலைவர்களுக்கு எதிராக, அக்கட்சியில் உள்ளவர்களை இழுக்கும் படலம் ஆரம்பமாகிவிட்டதாம்.. பாஜக ஆதரவாக உள்ள இந்த தலைவர்கள் "மதில்மேல் பூனை"யாக இருந்துவருவதால், இந்த வாய்ப்பை பாஜக பயன்படுத்தி கொள்ள பார்க்கிறதாம்.

அதுமட்டுமல்ல, எடப்பாடிக்கு ஆதரவாக சில முன்னாள்கள் இருந்தாலும், அவர்கள் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறார்களாம். எனவே, இதுபோன்றவர்களுக்கு கொக்கி போட பாஜக களமிறங்கி உள்ளதாம். இதில் யார் யார் பாஜக பக்கம் தாவ போகிறார்கள் என்று தெரியவில்லை.

மெகா கூட்டணி: மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து ஒரு வருட காலம் ஆகியும், இதுவரை அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.. யாருடனும் கூட்டணி உறுதியாகவில்லை.. ஆனால் போகிற போக்கை பார்த்தால், பாஜக முந்திக்கொண்டுவிடும் போல தெரிகிறது.. கூட்டணியை பலப்படுத்தி, 3வது அணியை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவற்கில்லை என்கிறார்கள்.. அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+