சிக்குகிறது "கருப்பு ஆடு".. எடப்பாடி பழனிசாமியை கவனிச்சீங்களா? விழும் "2 அம்பு".. கவனித்த திமுக, பாஜக
சென்னை: இன்னும் ஒருத்தர்கூட கூட்டணியில் உறுதி செய்யப்படாத நிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் கவனத்தை பெற்றுவருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. என்ன நடக்கிறது அதிமுகவில்?
சமீபகாலமாகவே, சில மாவட்ட செயலாளர்கள் சரியாக செயல்படாமல் உள்ளதாக, எடப்பாடி பழனிசாமியிடம் புகார்கள் கொண்டுபோகப்பட்டது.. ஆனாலும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாலேயே உள்ளதே என்ற முணுமுணுப்புகள் அதிமுகவில் எழுந்தபடியே இருந்தன. இந்த சலசலப்பைதான், ஒரே மீட்டிங்கில் ஆஃப் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

வாக்குச்சாவடி: நடந்து முடிந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், மறைமுகமான எச்சரிக்கையும் மாவட்ட செயலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல, வாக்குச்சாவடி வாரியாக அமைக்கப்படும் பூத் கமிட்டிகளை பலப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
அதேசமயம், கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமிக்கான மவுசு கூடியபடியே வருகிறது.. காரணம், பாஜகவை கழட்டிவிட்டால், பாஜக விசுவாசிகள், அதிமுகவிலிருந்து விலகி, பாஜகவில் ஐக்கியமாக கூடும் என்றெல்லாம் தகவல்கள் பரவின. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. பாஜக ஆதரவாளர்களான கொங்கு புள்ளிகளும், இப்போதுவரை எடப்பாடி பழனிசாமி பக்கமே உறுதியாக நிற்பது எடப்பாடிக்கான வெற்றியாக பார்க்கப்படுகிறது.
சிறுபான்மை கட்சிகள்: அதுமட்டுமல்ல, பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டபிறகு, சிறுபான்மை கட்சிகள் அதிமுகவை நெருங்கி சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது.. இதுவும் எடப்பாடிக்கான இன்னொரு வெற்றியாக பார்க்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், 2 விதமான வியூகங்களை எடப்பாடி பழனிசாமி கையில் எடுக்க போவதாக சொல்கிறார்கள்..
முதலாவது வியூகம் என்னவென்றால், சரியான முறையில் செயல்படாத பூத் கமிட்டி நிர்வாகிகள், உடனடியாக மாற்றப்படுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.. ஆனால், இப்படி மறைமுகமாக வார்னிங் தந்திருப்பது, செயல்படாத அந்த "மாவட்ட செயலாளர்களை" மனதில் வைத்துதானாம்..
துண்டு போடும் நிர்வாகிகள்: இன்னொருமுறை மாவட்ட செயலாளர்கள் மீது புகார்கள் வந்தால், வெளிப்படையாகவே அவர்களை பதவிநீக்கம் செய்யவும் தயங்க மாட்டார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள். அப்படி பதவிநீக்கம் செய்யப்பட்டால், பலம்பொருந்திய மாவட்ட செயலாளர் போஸ்டிங்குக்கு இப்போதே பலர் துண்டு போட்டும் வைத்துவிட்டார்களாம்.
அதேபோல, பூத் கமிட்டிகளை பலப்படுத்தி கட்சியில் சுறுசுறுப்பாக பணியாற்றுபவர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளாராம். எடப்பாடியின் இந்த அதிரடிகள், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், தெம்பையும் தந்து வருகிறதாம்.
இரண்டாவது வியூகம் என்னவென்றால், அனைத்து தொகுதிகளிலும் ரகசிய பார்வையாளர்களை நியமித்து கட்சியினரை கண்காணிக்கவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறாராம்.. அதுமட்டுமல்ல, கட்சி பணிகளில் மந்தமாக செயல்படும் நிர்வாகிகளையும் டிஸ்மிஸ் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன..
2வது வியூகம்: இந்த ரகசிய பார்வையாளர்கள், கிட்டத்தட்ட உளவு பிரிவு காவலர்கள் செயல்பட போகிறார்களாம்.. மேலும், தொகுதி வாரியாக ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு, தலைமைக்கு அதனை அறிக்கையாக அனுப்பவும் போகிறார்களாம்.. இதுபோக, விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும், எடப்பாடி பழனிசாமி திட்டதிட்டு வருகிறாராம்.
இந்த சுற்றுப்பயணத்தில், மக்களை சந்தித்து சிறுபான்மை உள்ளிட்ட வாக்குகளை கவருவதுடன், பூத் கமிட்டிகளை நேரடியாகவே ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளாராம். ஆக, பூத் கமிட்டி முதல் மா.செ.க்கள்வரை நடுநடுங்கிப்போயிருக்கிறார்களாம்.. எனினும், எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடிகள் கட்சிக்குள் புதுமாறுதலை ஏற்படுத்தி வருவதாக மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்..!!
-
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications