முக்கிய நிகழ்வில் 2 முக்கிய நபர்கள் ஆப்செண்ட்! திரும்பித் திரும்பி பார்த்து தேடிய அமைச்சர்கள்!
சென்னை: ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புதிய அமைச்சர் பதவியேற்பு விழா முடிந்த கையோடு முதலமைச்சரும் இலாக்கா மாற்றம் செய்யப்பட்ட 5 அமைச்சர்களும் கருணாநிதி அண்ணா நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
அந்த நிகழ்வில் 2 முக்கிய நபர்கள் கலந்துகொள்ளாதது அங்கிருந்த அமைச்சர்களுக்கும், கட்சியினருக்கும் என்னவாக இருக்கும் ஏன் அவர்கள் இருவரும் கலந்துகொள்ளவில்லை என யோசிக்க வைத்தது.

அண்ணா -கருணாநிதி நினைவிடங்களுக்கு செல்லாத அந்த 2 முக்கிய நபர்கள் யார் என்றால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், திமுக பொருளாளரும் அமைச்சர் ராஜாவின் தந்தையுமான டி.ஆர்.பாலுவும் தான்.
அண்ணா சதுக்கத்தில் மரியாதை செலுத்தும் முன் இது குறித்து அமைச்சர் ராஜாவிடம் முதல்வர் ஸ்டாலின் ஏதோ விசாரிக்க, அங்கிருந்த அமைச்சர்கள் அனைவரும் திரும்பித் திரும்பி பார்த்து உதயநிதியை தேடினர்.
ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோ ஏற்கனவே திட்டமிடப்பட்ட செய்தித்துறை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.ஆர்.பி.ராஜாவை பொறுத்தவரை உதயநிதி ஸ்டாலினின் நெருங்கி நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. நண்பர் முதல் முறையாக அமைச்சராகி கருணாநிதி நினைவிடம் சென்ற போது உதயநிதி அங்கில்லாதது பேசு பொருளாக உருவெடுத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை காட்டிலும் செய்தித்துறை நிகழ்ச்சியில் பங்கேற்பது முக்கியமா என புதிதாக ஒரு டாக் தொடங்கியுள்ளது. அண்ணா கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செய்த போது, இலாக்கா மாற்றம் செய்யப்பட்ட அமைச்சர்களில் மனோ தங்கராஜ் மட்டுமே சிரித்த முகத்துடன் ஸ்டாலினுக்கு வணக்கம் வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications