பூவை ஜெகனை விடுங்க.. எடப்பாடி திடீர் முடிவு.. 8 + 7 + 7 + 7 + 3? சாத்தியமா? கவனிக்குது திமுக, பாஜக
சென்னை: திமுகவின் சிறுபான்மை ஓட்டுக்களை உடைக்க, ஏகப்பட்ட முயற்சிகளை அதிமுக மேற்கொண்டு வருவதாக சொல்கிறார்கள்.. அந்தவகையில் 2 விதமான வியூகங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறாராம்.
சிறுபான்மையினர் ஓட்டுக்களை அதிமுக பக்கம் கொண்டு வரும் முனைப்புடன், பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டது.
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை.

கூட்டணி: அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை விலக்கினால் திமுக கூட்டணி உடையும், அந்த கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும் என்றெல்லாம் கணக்கு போட்டார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையிலும், திமுகவில் இருந்து யாருமே கூட்டணிக்கு வரவில்லை.
அந்தவகையில், இஸ்லாமிய ஓட்டுக்களை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளாராம்.. இதற்காகவே, 3 நாட்களுக்கு முன்பு, கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற்ற கிறிஸ்தவர்கள் உரிமை மீட்டெடுப்பு மாநாட்டிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அதேபோல, அதேபோல, இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நடத்தப்போகும் பிரமாண்டமான மாநாட்டிலும் கலந்து கொள்ள போகிறாராம்.
சிறுபான்மையினர்: மேலும், நிர்வாகிகளுக்கு சில அசைன்மென்ட்களை தந்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி... அதாவது, 'சிறுபான்மையினா் பிரச்சனைகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சிறுபான்மையினா் பங்களிப்பையும் கட்சியில் அதிகரிக்கச் செய்ய வேண்டும்.. பாஜகவுடன் அதிமுக இல்லை என்பதை மக்களிடம் தெளிவாக எடுத்து சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறாராம்.
அதுமட்டுமல்ல, 6 வருடங்களுக்கு முன்பு இழந்துவிட்ட சிறுபான்மையினர் வாக்குகளை, மறுபடியும் பெற்றாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, வரும் ஜனவரியில், தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளாராம் எடப்பாடி.
ஆதரவுகள்: பாஜகவுடன் கூட்டணி முறிவு அறிவிப்புக்கு பிறகு, முஸ்லிம் அமைப்புகளுக்கு அதிமுக அழைப்பு விடுத்திருந்த நிலையில், இஸ்லாமிய தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி அதிமுகவுக்கு ஆதரவையும் தந்தார்கள்.
மேலும், பூவை ஜெகனின் புரட்சி பாரதம், தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, ஜான் பாண்டியன் போன்றோர் மட்டுமே அதிமுகவுக்கு ஆதரவு தர முன்வந்துள்ளனரே தவிர, பெரிய கட்சி யாருமே இதுவரை அதிமுகவுடன் கூட்டணியை அறிவிக்கவில்லை.
தனித்து போட்டி: எனினும், கடந்த முறை தேர்தலில், 32 சதவீதம் ஓட்டுக்களை மட்டுமே அதிமுக பெற்ற நிலையில், இந்த வாக்கு சதவீதத்தை அதிகரிக்க திட்டமிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்காக, வரும் தேர்தலில் 39 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால், அதிமுகவின் ஓட்டு சதவீதமும் அதிகரிக்கும், சிறுபான்மையினரும் நடுநிலையாளர்களும் இந்த முறை தங்களுக்கு நிச்சயம் கை கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறாராம்.
அதற்காகத்தான், ஜாதி ரீதியாக செல்வாக்குள்ள வேட்பாளர்களை தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளாராம். அத்துடன், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு மட்டும், கட்சி சார்பில் தேர்தல் செலவு செய்யலாம் என்றும் கணக்கு போடுகிறாராம்.
வன்னியர்கள்: குறிப்பாக, வன்னியர் - 8 தொகுதி, கவுண்டர் - 7 தொகுதிகள், முக்குலத்தோர் 7 தொகுதிகள், பட்டியலின சமுதாயங்களுக்கு 7 தொகுதிகள், முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு தலா - 3 என தொகுதிகள் என்று தற்சமயம் கணக்கு போடப்பட்டுள்ளதாம். மற்ற தொகுதிகளுக்கு இதர சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் தரவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனினும், ஜாதி வாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்து, அதிமுகவுக்கு கை கொடுக்குமா? முக்கியமாக, சிறுபான்மையினர் வாக்குகள் திடீரென அதிமுகவுக்கு அதிகரித்துவிடுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications