ஓபிஎஸ்ஸூக்கு குஷியோ குஷி.. எடப்பாடி பழனிசாமி கணக்கு சல்லி சல்லியா போகுதே.. அசரடிக்கும் மேலிட பாஜக
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2 விஷயங்களை கேள்விப்பட்டு படுகுஷியில் உள்ளாராம்.. என்ன நடக்கிறது அதிமுகவில்? எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்?
ஏற்கனவே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில், தேவர் ஜெயந்திக்கும் எடப்பாடி பழனிசாமி வராமல் போனது, தென்மண்டலத்தில் அதிருப்தியை கூட்டியது..
அதேபோல, மாயத்தேவருக்கும் எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை.. இதனால், பெரும்பாலான முக்குலத்தோர் சமுதாயமும் எடப்பாடி பழனிசாமி மீதான வருத்தத்தை பதிவு செய்தவாறே உள்ளனர்..

எப்போதுமே கொங்கு மண்டலத்துக்கு ஆதரவாக எடப்பாடி செயல்படுகிறார் என்ற இந்த ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துதான், மூத்த தலைவர் வைத்திலிங்கம் போன்றோர் எடப்பாடியிடமிருந்து பிரிந்து ஓபிஎஸ் பக்கம் சென்றார்கள். இப்படிப்பட்ட சூழலில், எம்பி தேர்தல் வரப் போகிறது..
அதிமுக அதிருப்தி: அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ளதால், அனைவருக்குமான தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுப்பார் என்றே நம்பப்பட்டு வருகிறது.. ஆனால், நேற்று முன்தினம், டெல்லியில் கூட்டணி பேச்சுவார்த்தையை அமித்ஷாவுடன் நடத்த, தன்னுடன் கொங்கு மண்டல தலைவர்களை மட்டுமே உடன் அழைத்து சென்றுள்ளார்.. இதுதான் முக்குலத்தோர் சமூகத்தினரிடையே மேலும் எரிச்சலை கூட்டி வருகிறது..
பழனிசாமி பல்ஸ்: இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தொடர்ந்து முக்குலத்தோர் புறக்கணிக்கப்படுவதாக அந்த சமூகத்தினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி அதிகரித்து கொண்டிருக்கிறது.. அதாவது, கவுண்டர், வன்னியர் சமூகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட்டிருந்த நிலையில், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் யாருமே அதில் இல்லை.. அதாவது, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.
சீனியர் என்பதால் மீனவர் சமூகத்தை சேர்ந்த ஜெயக்குமாரை அழைத்து சென்றதாக தெரிகிறது.. அதேபோல, உதயகுமார், செல்லூர் ராஜூ போன்றவர்களையும் அழைத்து செல்லவில்லை. விஜயபாஸ்கரைகூட காணோமே என்று நொந்து போயுள்ளார்களாம்.

பிளஸ் பாயிண்ட்ஸ்: ஆனால், இதெல்லாம் ஓபிஎஸ்ஸூக்கு பிளஸ் ஆகி கொண்டிருக்கிறதாம்.. ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்று எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வலியுறுத்தியிருக்கிறார்.. இதற்கு எடப்பாடி வழக்கம்போல் மறுத்துவிட்டாலும், பாஜக தன் மீதான நம்பிக்கையை இன்னும் குறைக்காமல் உள்ளது என்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளாராம் ஓபிஎஸ்.. அதுமட்டுமல்ல, தொடர்ந்து முக்குலத்தோரின் அதிருப்தியை பெற்றுவருவதுடன், மதுரையில் நடத்தபோகும் எடப்பாடி பழனிசாமியின் மாநாடு, போதுமான பலனையும் பெற முடியாமல் போய்விடும் என்றும் ஓபிஎஸ் நம்புகிறாராம்..
மாநாடு: கடந்த வாரம் ஓபிஎஸ் திருச்சியில் மாநாட்டை நடத்தியிருந்தார்.. அந்த மாநாட்டுக்கு வந்திருந்தவர்களில் 70 முதல் 80 சதவீதத்தினர், தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் இருந்தே வந்திருந்தார்கள்.. அத்துடன், ஒருசமூகத்துக்கு எதிராகவே எடப்பாடி பழனிசாமி, அரசியல் செய்து கொண்டிருப்பதாக, அவர்களில் பலர் பொருமினார்களாம்.. அதுமட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் ஆதரவை முழுமையாக பெற வேண்டுமானால், சசிகலா, தினகரனுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓபிஎஸ்ஸின் தற்போதைய திட்டமாக உள்ளதாம்..
ஏற்கனவே, டெல்லி மேலிட சப்போர்ட் இல்லாமல், ஓபிஎஸ்ஸால் இந்த அளவுக்கு அரசியல் செய்ய முடியாது என்ற சலசலப்புகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சசிகலா + தினகரனின் ஆதரவை முழுமையாக, இந்த மாநாட்டில் ஓபிஎஸ் பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.. அந்தவகையில், தென்மண்டல வாக்குகளை தன்பக்கம் திருப்ப வேண்டுமானால், எடப்பாடி பழனிசாமி நிறையவே வியூகங்களை வகுக்க வேண்டியிருப்பதாக கூறுகிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications