'ஆத்தி போலீஸ்'.. ஆட்டோவிலிருந்து எகிறி குதித்து ஓடிய மர்ம நபர்.. பையை திறந்த சென்னை போலீஸ்க்கு ஷாக்
சென்னை: சென்னை மண்ணடியில் வாகன சோதனையின் போது 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பி ஓடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை மண்ணடி பகுதியில் வடக்கு கடற்கரை போலீசார் வாகன சோதனையில் இன்று அதிகாலை ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த பகுதியில் வந்திருந்த ஆட்டோவில் வந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அவர் முண்ணுக்கு பின் முரணாக பேசியிருக்கிறார். அப்போது அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்ய முயன்றுள்ளனர். அவர் பையுடன் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார்.

சென்னை கடற்கரை
இந்த சம்பவம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் நடந்திருந்தது.உடனடியாக போலீசார் துரத்திச் சென்ற போது, அந்த நபர் கொண்டுவந்திருந்த பையை மட்டும் தூக்கி போட்டுவிட்டுள்ளார்.

பயத்தில் தப்பி ஓட்டம்
பின்னர் கடற்கரை ரயில் நிலையத்திற்குள் சென்ற அந்த நபர், அங்கு சென்று கொண்டிருந்த ஓடும் ரயிலில் தப்பி இருக்கிறார். போலீசார் ஓடும் ரயிலில் ஏறவில்லை. ஏனெனில் ரயிலில் ஏறி அவரை பிடிக்க முயற்சிக்கும் போது, பயத்தில் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயலும் அபாயம் இருந்ததால் அவரை அப்போது போலீசார் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சி
இதனிடையே பையில் என்ன இருக்கிறது என்பதை சோதித்த போது, இரண்டு கிலோ அளவிலான 3 தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. தப்பிச் சென்ற நபருக்கு 25 முதல் 30 வயதிற்குள் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணை
ஆட்டோவை பொறுத்தவரை, அந்த நபர் ராயபுரம் ஆட்டோவில் ஏறி, சவுகார்பேட்டை செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனடிப்படையில் ஆட்டோ டிரைவரிடம் தீவிர விசாரணை செய்துவிட்டு அனுப்பி வைத்துள்ளனர். தப்பி சென்ற நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications