சென்னையில் போக்குவரத்து பணிமனையில் விபத்து.. சுவரில் பேருந்து மோதி இருவர் பலி.. ஓட்டுநர் கைது
சென்னை: சென்னை வடபழனியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் பேருந்து மோதிய விபத்தில் சுவர் இடிந்து விழுந்ததால் பணிமனை ஊழியர்கள் இருவர் பலியாகிவிட்டனர்.
சென்னை வடபழனியில் உள்ள போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்குள்ள பேருந்துகளில் நள்ளிரவு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதில் டிரைவர்கள், கன்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என பணியில் மும்முரமாக இருந்தனர்.

அப்போது பாலமுருகன் என்ற ஓட்டுநர் தனது பேருந்தை எடுத்துக் கொண்டு பராமரிப்பு பணிகள் பார்க்கும் இடத்துக்கு ஓட்டி சென்றார். அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பணிமனை சுற்றுச் சுவர் மீது மோதியது.
இந்த விபத்தில் ஓய்வறையில் படுத்திருந்த பணிமனை ஊழியர்கள் இருவர் பலியாகிவிட்டனர். அவர்கள் பாரதி, சேகர் என தெரியவந்துள்ளது. இருவரும் பணிமனையில் தொழில்நுட்ப பணியாளர்களாக உள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். பின்னர் காயமடைந்தவர்களை சக ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
இதையடுத்து பணிமனையிலிருந்து எந்த பேருந்துகளும் இயக்கப்படாததால் பயணிகள் அவதிப்பட்டனர். சிறிது நேரத்துக்கு பின்னர் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. இதனிடையே ஓட்டுநர் பாலமுருகனை போலீஸார் கைது செய்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications