அடுத்தடுத்து 2 அறிவிப்பு.. 2ம் தங்கம் மாதிரி.. ரேஷன் கார்டு வச்சு இருக்கவங்க.. இதை நோட் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாடு முழுக்க ரேஷன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு இரண்டு முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. கடந்த சில நாட்களில் வெளியிடப்பட்ட இந்த 2 அறிவிப்புகளும் மக்களுக்கு பெரிய அளவில் பயன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவதாக, தமிழ்நாடு முழுக்க புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்க உள்ளது. புதிய ரேஷன் கார்டுகள் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக புதிய கார்டுகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. புதிதாக ரேஷன் கார்டுகள் கேட்டு 2.8 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்த பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி புதிதாக 2.8 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இன்று முதல் தினமும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்.
ரேஷன் கடை அதிரடி: தமிழ்நாடு ரேஷன் கடைகளில் விரைவில் புதிய பொருள் ஒன்றை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் புதிதாக இனிமேல் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. தேங்காய் எண்ணெய் நேரடியாக விவசாயிகளிடம் வாங்கி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் இதற்கான அறிவிப்புகள் பிரச்சாரத்தில் திமுகவினர் மூலம் கொடுக்கப்பட்டது. தற்போது அதற்கான சாத்திய கூறுகளை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து வருகிறதாம்.
இன்னொரு முக்கிய அறிவிப்பு: தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கருவிழி பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 90% ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
விரைவில் அனைத்து கடைகளிலும் கொண்டுவரப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தகவல்.
பயோமெட்ரிக் முறையில் வயதானவர்களால் சரியாக கைரேகை பதிவு செய்ய முடியாததால் மாற்றுத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் தங்கள் கருவிழிகளை பயன்படுத்தும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த வருடத்தில் எல்லா நகரத்திலும், மாநகரத்திலும் குறைந்தது 90% ரேஷன் கடையிலாவது இந்த திட்டம் அமலுக்கு வரும். கடைகளில் ஏற்கனவே பயோமெட்ரிக் உள்ளது.
கருவிழி சரிபார்ப்பு முறை: வரும் நாட்களில் தமிழ்நாடு முழுக்க கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரேஷன் பொருட்கள் திருடப்படுவது குறையும். ரேஷன் பொருட்களை மக்கள் வாங்காத நிலையில், அதை வாங்கியதாக கூறி ஏமாற்றி வெளியே விற்கும் பழக்கம் குறையும்.
வாங்கப்படாத ரேஷன் பொருட்கள் மீண்டும் கிடங்கிற்கே செல்லும் முறையை கொண்டு வர முடியும். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் பொருட்கள் அடிக்கடி திருடப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு செல்ல வேண்டிய பொருட்களை சிலர் திருடி அண்டை மாநிலங்களில் விற்று வருகிறார்கள். அது முற்றிலுமாக தடுக்கப்படும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications