குஷ்பு ராஜினாமா செய்ததும்.. இரவு முழுக்க பரவிய செய்தி! பாஜக பூகம்பம்! அப்படி மட்டும் நடந்தா ட்விஸ்ட்
சென்னை: நேற்று குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததும் திடீரென இரண்டு முக்கியமான செய்திகள் பரவ தொடங்கின. இது தொடர்பாக பாஜக தரப்பில் விசாரித்தோம். நம்மிடம் முக்கியமான சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். குழந்தைகள் மற்றும் மகளிர் நல மேம்பாட்டுத்துறை குஷ்புவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார் குஷ்பு பின்னர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த பதவியில் இருந்து குஷ்பு தற்போது ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா செய்ததும் திடீரென இரண்டு முக்கியமான செய்திகள் பரவ தொடங்கின.
செய்தி 1: அதன்படி குஷ்பு தமிழ்நாடு பாஜக தலைவர் ஆக போகிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால் செய்தியில் உண்மை இல்லை என்று பாஜக தரப்பு நம்மிடம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாகவே உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வர தொடங்கி உள்ளன. பல்வேறு அரசியல் நிபுணர்கள் இது தொடர்பாக இணையத்தில் தகவல்களை வெளியிட தொடங்கி உள்ளன. நாமும் இது தொடர்பாக பாஜகவில் சிலரிடம் பேசினோம். பாஜக தலைவர் விவகாரம் தொடர்பாக சில முக்கியமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்தனர்.
அண்ணாமலை மீது டெல்லி பாஜகவிற்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. அண்ணாமலைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் டெல்லி உள்ளது. அண்ணாமலைதான் கட்சியை வளர்த்தார்.. இரண்டு இலக்கத்தில் வாக்கு வங்கியை கொண்டு சென்றது அவர்தான் என்ற பெருமை டெல்லிக்கு உள்ளது. அவர் வெளிநாடு செல்வது மட்டுமே அண்ணாமலைக்கு எதிராக உள்ளது. மற்றபடி டெல்லி அவரை நம்பாமல் எல்லாம் இல்லை. அவர் பதவியில் தொடர வேண்டும் என்பதே விருப்பம்.. ஆனால் அவர் வெளிநாடு செல்வது மட்டுமே அண்ணாமலைக்கு எதிராக உள்ளது.
இப்போதைக்கு தலைவர் மாற்றம் உறுதியாகவில்லை என்றே நம்மிடம் பேசிய பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இது தொடர்பாக ஆலோசனை நடந்து உள்ளது. ஆனால் நியமிக்கப்பட போவது தற்காலிக தலைவரா .. நிரந்தர தலைவரா என்பது தெரியாது. அப்படி இருக்க குஷ்புவிற்கு அப்படி பதவி வழங்கப்படாது என்கிறார்கள்.
செய்தி 2: இது போக.. குஷ்பு.. மாநில ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வந்தன. சமீபத்தில் பெரிய அளவில் ஆளுநர் பதவி மாற்றங்கள் நடந்தன.. மகாராஷ்டிரா ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். தெலுங்கானா ஆளுநராக விஷ்ணு தேவ் வர்மா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மற்ற ஆளுனர்கள்: பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பஞ்சாப்பிற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மண் ஆச்சாரியாவிற்கு மணிப்பூர் மாநில ஆளுநர் பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் மாநில ஆளுநராக ஹரிபாவ் கிசன்ராவ் பக்தே நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சத்தீஸ்கர் மாநில ஆளுநராக ராமன் தேகா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சி எச் விஜயசங்கர் மேகாலய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள குலாப் சந்த் கட்டாரியாவிற்கு, சண்டிகர் துணை நிலை ஆளுநர் பொறுப்பும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். IAS அதிகாரியான கைலாசநாதன் மோடிக்கு மிகவும் நெருக்கம். மோடியுடன் மிக நெருக்கமாக பழகும் சிலரில் இவரும் ஒருவர். ஓம் பிரகாஷ் மாத்தூர் சிக்கிம் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சந்தோஷ் குமார் கங்குவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இப்படி இருக்க இனி ஆளுநர் மாற்றம் வாய்ப்பு இல்லை. அப்படி இருக்க குஷ்புவிற்கு அந்த பதவிக்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.. விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications