ஃபேக் ஐடி மிரட்டல்.. எடுத்த சபதம் முடிக்கும் வருண்குமார் ஐபிஎஸ்! வசமாய் சிக்கிய நாம் தமிழர் தம்பிகள்
சென்னை: நாம் தமிழர் கட்சி சீமான் ஒருங்கிணைப்பாளர் சீமான் - திருச்சி எஸ்பி வருண்குமார் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில் வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆபாசமாக சித்தரித்ததாக அவர் அளித்த புகாரின் பேரில் மேலும் இரு நாம் தமிழர் கட்சியினரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி எஸ்பி நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு நாம் தமிழர் கட்சியினை பழிவாங்குவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் புகார் கூறியிருந்தார்.

மேலும் குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் எஸ்பி வருண்குமார் அணுகி வருவதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து தொடர்ந்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் தரக்குறைவாக விமர்சிப்பதால் எக்ஸ் தளத்திலிருந்து தானும் தனது மனைவியும் விலகுவதாக அறிவித்தார் வருண்குமார். மேலும் தன்னையும் தனது மனைவி மற்றும் குழந்தைகள் குடும்பத்தினர் என அனைவரையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சுமார் 50 பேரின் பட்டியலை பகிர்ந்த அவர் இது தொடர்பாக யாரையும் விடப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.
மேலும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் சமூக வலைதளத்தில் பேசும் இணையதள கூலிப்படையினர் மற்றும் அவர்களை தூண்டிவிடும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்திருந்தார் . இந்த நிலையில் வருண்குமாரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏற்கனவே தன் மீது 130க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் நிலையில் அதனை 200 வழக்குகளாக மாற்ற வேண்டாம்.. எத்தனை நோட்டீஸ் அனுப்பினாலும் தான் அதை குப்பை தொட்டியில் தான் வீசுவேன் என தெரிவித்திருந்தார்.
மேலும் திமுகவின் ஐடி விங் நிர்வாகி போல வருண்குமார் செயல்படுவதாகவும் பதவியை ராஜினாமா செய்து விட்டு தன்னுடன் நேருக்கு நேர் மோத வேண்டும் என சவால் விடுத்தார். அதற்கு பதில் அளித்துள்ள வருண்குமார் ஐபிஎஸ்,"திரள் நிதியிலோ, யாசகம் பெற்றோ தனக்கு இந்த பதவி கிடைக்கவில்லை. தான் காக்கி சட்டையில் இருப்பது அவ்வளவு பயமா? " என கேட்டிருந்தார். இப்படியாக இருவரிடையே மோதல் தொடர்ந்து வலுத்து வருகின்றது.
இந்த நிலையில் வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி குடும்பத்தினர் குறித்து சமூக வலை தளத்தில் ஆபாசமாக பதிவிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் கல்லூரி மாணவர் என்பவர் அவரை அறிவுறை கூறி வருண்குமார் அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் வருண்குமார் அளித்த புகாரின் பேரில் மேலும் இருவரை, போலீசார் கைது செய்தனர். மதுரை விஸ்வநாதபுரம் தபால் தந்தி நகரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் , கள்ளக்குறிச்சி களமருதூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சண்முகம் ஆகியோரை இன்று தில்லைநகர் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதன் மூலம் இவ்வழக்கில் கைதான நபர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications