Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 பெருங்கடல்கள் காணாமல் போய்விடும்.. ஜாக்கிரதை! சூப்பர் கம்ப்யூட்டர் தந்த வார்னிங்! வருகிறது கண்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரண்டு பெருங்கடல்கள் காணாமல் போக போவதாக சீனா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுக்க கடல் மட்டம் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கடல் அளவு அதிகரிக்கும் என்று பல உலக நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்த எச்சரிக்கைக்கு அப்படியே எதிர்பதமாக உலகத்தில் இரண்டு பெரிய கடல்கள் காணாமல் போக போவதாக சீனா ஆஸ்திரேலியாவில் உள்ள Curtin University மற்றும் சீனாவில் உள்ள Peking University ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

பசிபிக் கடல்

பசிபிக் கடல்

இவர்களின் ஆராய்ச்சியின்படி பசிபிக் கடல் ஒவ்வொரு வருடமும் மறைந்து கொண்டே இருக்கிறதாம். இங்கே புதிதாக நிலங்கள் தோன்றும். பசிபிக் கடலின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிக்கொண்டே வருகிறது. இதனால் அடுத்தது 200-300 மில்லியன் வருடங்களில் இந்த கடல் மொத்தமாக காணாமல் போகும் என்று அதில் தெரிவித்து உள்ளனர். அதோடு, ஆசியாவும் அமெரிக்காவும் மோத போவதாகவும் இவர்கள் தெரிவித்து உள்ளனர்.

கடல்

கடல்

இதன் காரணமாக கரிபியன் கடல் பகுதியும் மொத்தமாக காணாமல் போகும் என்றும் தெரிவித்து உள்ளனர். ஆசியா - அமெரிக்கா ஒன்றாக மோதினால் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியில் குறிப்பிட்டு உள்ளனர். இப்படி மோதிக்கொள்ளும் நிலங்கள் புதிய கண்டத்தை உருவாக்கும். அது மிகப்பெரிய கண்டமாக இருக்கும். இதை சூப்பர் கண்டம் என்று அழைக்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளனர். இதற்கு பெயரும் சூட்டி உள்ளனர்.

கண்டம்

கண்டம்

அதன்படி ஆசியா - அமெரிக்கா சேர்ந்து அமேசியா என்று இதற்கு பெயர் வைத்து உள்ளனர். ஆனால் இது இப்போதே நடக்காது இன்னும் 200-300 மில்லியன் வருடங்கள் ஆகும் என்று குறிப்பிட்டு உள்ளனர். ஒவ்வொரு 600 மில்லியன் வருடங்களுக்கும் கண்டங்கள் இடம்பெயர்வு நடக்கும். தற்போது உள்ள கண்டங்கள் உருவாகி 300 மில்லியன் வருடங்கள் கிட்ட ஆகிவிட்டது. எனவே அடுத்த 200-300 மில்லியன் வருடங்களில் புதிய கண்டங்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்கா

அமெரிக்கா

அப்போது பசிபிக் கடல், கரிபியன் கடல் இரண்டும் காணாமல் போகும் வாய்ப்புகள் உள்ளன என்று இந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சூப்பர் கம்ப்யூட்டர் உதவியுடன் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளனர். இரண்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்து சூப்பர் கம்ப்யூட்டர் உதவியுடன் பூமி அடுக்குகள் மாறுவதை வைத்து இந்த கணிப்பை நிகழ்த்தி உள்ளனர். இதில் ஆஸ்திரேலியா மிகப்பெரிய ரோல் செய்ய போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். அதன்படி ஆஸ்திரேலியாதான் ஆசியா - அமெரிக்காவை இணைக்க போகும் நிலப்பரப்பாக இருக்கும்.

ஆசியா

ஆசியா

இவை மூன்று இணைந்தே புதிய கண்டம் உருவாகும். இதனால் இரண்டு கடல்கள் அடியோடு காணாமல் போகும் என்று தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக அண்டார்டிகா மொத்தமாக தனித்துவிடப்படும். பூமியின் இன்னொரு பக்கத்தில் அண்டார்டிகா இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளனர். ஆஸ்திரேலியா ஏற்கனவே ஒவ்வொரு வருடமும் ஆசியாவை நோக்கி 7 செமீ நகரத்து வருகிறது. இதனால் இந்த இடப்பெயர்வு கண்டிப்பாக 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் நடக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+