சென்னையை அதிரவைத்த 'பஞ்சாயத்து'.. குடிபோதையில் 'சம்பவம்' செய்த போலீசார்.. கடைசியில இப்படி ஆயிடுச்சே
சென்னையில் குடிபோதையில் ஓட்டலில் ரகளை செய்த போலீஸ்காரர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
சென்னை: திருவொற்றியூரில் ஓட்டல் ஒன்றில் மதுபோதையில் தகராறு செய்த வழக்கில் காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் கோட்டமுத்து, தனசேகர். இவர்களுடன் மேலும் 3 காவலர்கள் ஓரிரு நாட்களுக்கு முன்னர் திருவொற்றியூர் கணக்கர் தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு சாப்பிட சென்றிருக்கிறார். இந்த ஓட்டலில் பரோட்டாவும், பாயாவும் பேமஸ் என்பதால் வழக்கமாகவே ஓட்டலில் கூட்டம் அலைமோதும். சம்பவத்தன்றும் ஓட்டலில் கணிசமான அளவுக்கு ஆட்கள் இருந்திருக்கின்றனர். இந்நிலையில் சாப்பிட சென்ற காவலர்கள் பரோட்டாவை ஆர்டர் செய்துள்ளனர்.
ஆர்டர் செய்ததைப்போலவே பரோட்டா வந்திருக்கிறது. அத்துடன் வைக்கப்பட்ட பாயா சீக்கிரமாக தீர்ந்துவிட்ட நிலையில், இரண்டாவது ரவுண்ட் பாயா கேட்டிருக்கிறார்கள். அப்போது பாயா வருவதற்கு சற்று தாமதமாகியுள்ளது. இங்குதான் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. எவ்வளவு நேரம் பாயாவுக்காக வெயிட் பண்றது என சில தடித்த வார்த்தைகளால் காவலர்கள் பேசியுள்ளனர். இதை கவனித்த சக ஊழியர்கள் இப்படி பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

ரகளை
அவ்வளவுதான் உடனே காவலர்களுக்கு கோபம் வந்துவிடவே வாக்குவாதம் பெரியதாக வெடித்திருக்கிறது. பணியிலிருந்த ஓட்டல் ஊழியர்களை தரகுறைவாக பேசி, பக்கத்து டேபிளில் சாப்பிட உட்கார்ந்த வாடிக்கையாளர்களுக்கும் தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள். 30 நிமிடங்களுக்கு பின்னர் அங்கிருந்து காவலர்கள் சென்றுவிட்டனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓட்டல் உரிமையாளர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதேபோல சிசிடிவி காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பரவியது.

குடிபோதை
சம்பவம் தொடர்பாக விசாரிக்க தொடங்கிய காவல்துறை அதிகாரிகள் திருவொற்றியூர் காவலர்கள் கோட்டமுத்து மற்றும் தனசேகர் உள்ளிட்ட 5 காவலர்கள் ரகளையில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இவர்கள் சம்பவம் நடந்தபோது மது போதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவலர்கள் கோடமுத்து மற்றும் தனசேகர் இருவரையும் சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதேபோல இதர காலவர்கள் 3 பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து 2 காவலர்களும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அச்சம்
பொதுமக்களை தாக்குவது, குற்றம் உறுதி செய்யப்படாமல் இருக்கும் நிலையில் குளிக்கும்போது வழுக்கி விழுந்ததாக மாவு கட்டு போடுவது, குடிபோதையில் அராஜகம் செய்வது என தொடர்ந்து பல்வேறு சம்பவங்களில் காவல்துறையினர் சிக்கி வருகின்றனர். இப்படி இருக்கையில் காவலர்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமே தவிர தொந்தரவு செய்யக்கூடாது என்றும், மக்களிடம் கனிவுடன் நடந்துக்கொள்ள வேண்டும் எனவும் உயர் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மேற்குறிப்பிட்ட சம்பவம் இந்த அறிவுரையை மீறுவதைப்போல இருப்பதாக திருவொற்றியூர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வடசென்னை
அதே நேரத்தில் போதைப்பொருளுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னையில் உள்ள மண்டலங்களின் முதன்மையானதும், வடசென்னையின் முக்கியமான பகுதியில் திருவொற்றியூரும் ஒன்று. இந்த பகுதியில் தொடர்ச்சியாக பல குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதன் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனில் காவல்துறையினர் தீவிரமாக இயங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் ஓட்டலில் குடி போதையில் காவலர்கள் கலாட்டா செய்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications