ப்ளீஸ்.. உங்ககிட்ட தயவு செஞ்சு கேட்குறேன்! +2 ரிசல்ட்டை அறிவித்த உடனே! அன்பில் சொன்ன முக்கிய விஷயம்
சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் இன்று வெளியானது . இந்த முடிவுகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், இந்த முறை தேர்வு எழுதியவர்கள் 7.92 லட்சம் பேர் . இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7.53 லட்சம் பேர்.. மாணவியர்கள் 4.54 லட்சம் மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் . மாணவர்கள் 3.57 லட்சம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
மாணவிகள் தேர்ச்சி விகிதம் - 96.70% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 93.16% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.54 சதவிகிதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணை தேர்வு நடக்க உள்ளது. தேர்வை 10 ஆயிரம் பேர் எழுதவில்லை. அவர்களுக்கும் துணை தேர்வு நடக்க உள்ளது. இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
தேர்வு எழுதாதவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்கள் நேரில் சந்தித்து தேர்வு எழுத வைக்கப்படுவார்கள். ப்ளீஸ்.. உங்ககிட்ட தயவு செஞ்சு கேட்குறேன்.. துணை தேர்வு எழுதுங்கள் . துணை தேர்வை எழுதினால் இந்த வருடமே நீங்கள் கல்லூரிக்கு போகலாம். உங்கள் நண்பர்களுடன் ஒன்றாக அமரலாம்.

பயப்பட வேண்டாம். தைரியமாக தேர்வு எழுத வாருங்கள். இவர்களின் பெற்றோர்களிடம் சொல்கிறேன். அவர்களை தேர்வு எழுத அனுப்புங்கள். கடந்த முறையை விட இந்த முறை தேர்வு எழுதாமல் போனவர்கள் எண்ணிக்கை குறைந்து உள்ளது. அது நல்ல விஷயம். ஆனாலும் 10 ஆயிரம் பேர் எழுதவில்லை என்பது சரியில்லை. அவர்கள் அடையாளம் காணப்பட்டு தேர்வு எழுத வைக்கப்படுவார்கள், என்று முடிவுகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்தார்.
தேர்வு முடிவுகள்
பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மூன்றாம் தேதி முதல் தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகளே இன்று வெளியானது. கடந்த ஆண்டுகளை விட கூடுதல் விகிதத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் 98.82 சதவிகிதம் பெற்று முதலிடம்
ஈரோடு மாவட்டம் 97.98 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடம்
திருப்பூர் மாவட்டம் 97.53 சதவிகிதம் பெற்று மூன்றாம் இடம்
கோவை மாவட்டம் 97.48 சதவிகிதம் பெற்று நான்காம் இடம்
குமரி மாவட்டம் 97.01 சதவிகிதம் பெற்று ஐந்தாம் இடம்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 26,887 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் சென்டம் எடுத்துள்ளனர்
கணினி அறிவியல் பாடத்தில் 9,536 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்
வேதியியல் பாடத்தில் 3,181 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்
கணித பாடத்தில் 3,022 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்
தமிழ் பாடத்தில் 135 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்
ஆங்கில பாடத்தில் 68 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications