2 சாய்ஸ் இருக்கு! இதுல ஒன்றுதான் நடக்க போகுது.. வானிலையில் ஏற்படும் ட்விஸ்ட்.. வல்லுனர்கள் வார்னிங்!
சென்னை: வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலிமை குறைந்த பின் கரையை கடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை ரெய்ன்ஸ் வானிலை அமைப்பு 2 தகவல்களை வெளியிட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழையில் முதல் இரண்டு வாரம் இந்த மாதம் கனமழை பெய்தது. இந்த நிலையில் மூன்றாவது வாரமும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட மழை இந்த வாரம் பெய்யவில்லை.
இந்த மாத தொடக்கத்தில் வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது. இந்த வளிமண்டல சுழற்சி.. பெயரில் இருக்கும் சுழற்சிக்கு ஏற்றபடி சென்னைக்கு மழையை கொடுத்து அப்படியே டெல்டா.. தென் மாவட்டங்களுக்கும் மழையை கொடுத்தது.

சென்னை வானிலை
அதன்பின் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறியது. ஆனால் தாழ்வு மண்டலமாக மாற போதிய நேரம் இல்லை. அதற்கு முன் தாழ்வு பகுதியாகவே கரையை கடந்தது. இந்த இரண்டிற்கும் புயலாக மாறும் வாய்ப்புகள் எல்லாம் இல்லை. போதிய வெப்பநிலை இருந்தாலும் இவை இரண்டும் இலங்கை நிலப்பரப்பிற்கு அருகில் இருந்தன. இதன் காரணமாக இரண்டு வானிலை மாற்றங்களும் புயலாக மாறும் அளவிற்கு வலிமையானதாக இல்லை. இந்த நிலையில்தான் மூன்றாவது தாழ்வு பகுதி அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவானது.

தாழ்வு பகுதி
படத்தில் வரும் வில்லனுக்கு இணையாக இதில் இந்த தாழ்வு பகுதிக்கு இன்ரோ எல்லாம் கொடுக்கப்பட்டது. போதிய வெப்பநிலை, நிலத்தில் இருந்து அதிக தூரம் என்று புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் இதற்கு இருந்தன. ஆனால் இதை காலி செய்வதற்கு ஹீரோவாக வந்ததுதான் வறண்ட காற்று. இந்த வறண்ட காற்று தாழ்வு பகுதி பலம் பெறுவதை தடுத்தது. தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுவதை தடுத்துக்கொண்டே இருந்தது. அதேபோல் அருகில் இருந்த மற்ற சுழற்சிகளும் இது வலிமை பெறுவதை தடுத்தது. இதன் காரணமாக தாழ்வு மண்டலம் உருவாவது தாமதம் ஆனது.

தாழ்வு மண்டலம்
அப்படியே உருவான தாழ்வு மண்டலமும் பெரிதாக வலிமை இல்லாத தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இரண்டு நாட்கள் முன்பு தாழ்வு மண்டலமாக மாறியது. அதை தொடர்ந்து சென்னையை நோக்கி இது வந்து கொண்டு இருந்தது. நேற்று இதன் வேகம் சட்டென குறைந்தது. மிக மிக மெதுவாக நகர தொடங்கியது. அதன்பின்பாக நேற்று சென்னைக்கு அருகே 150 கிமீ தூரம் வரை வந்து வங்கக்கடலில் மையம் கொண்டது. சென்னைக்கு மிக அருகில் இந்த தாழ்வு மண்டலம் வந்தது. அதன்பின் இந்த தாழ்வு மண்டலம் பெரிதாக நகரவில்லை. அங்கேயே நிலை கொண்டது. அங்கேயே இந்த தாழ்வு மண்டலம் அதிக அளவு மழையை கொடுத்தது. அதாவது கடலிலேயே இது மழையை கொடுத்தது.

வலிமை இல்லை
இந்த நிலையில் இந்த தாழ்வு மண்டலம் இன்று தாழ்வு பகுதியாக வலிமை இழக்கிறது. இந்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் மழை பெய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் இரண்டு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை ரெயின்ஸ் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி, இந்த தாழ்வு மண்டலம் நகர்வது போல தெரியவில்லை. இது கரையை கடக்க வாய்ப்பு உள்ளதா என்று தெரியவில்லை. இது கரையை கடந்தால் சென்னையில் மழை பெய்யும். தற்போது இருக்கும் குளிர்ந்த வானிலைக்கு பதிலாக சென்னையில் மழை பெய்யும். ஆனால் வராமல் போகவும் வாய்ப்புகள் உள்ளன, என்று குறிப்பிட்டு உள்ளனர்.

என்ன நடக்கும்?
இந்த 2 சம்பவங்களில் ஒன்றுதான் நடக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடந்தால் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்து உள்ளது. ஏனென்றால் சென்னைக்கு அருகில் எங்காவதுதான் கரையை கடக்க வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் சென்னையில் கனமழை பெய்யும். ஆனால் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையில் இருந்து 150 கிமீ தூரத்தில் உள்ளது. இதனால் கடல் பகுதியில் மழை பெய்து வருகிறது;
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications