மூட்டை மூட்டையா.. 20 கிலோ கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த பெண்கள் சென்னையில் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒடிசாவில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் 20 கிலோ கஞ்சாவுடன் வந்த இரு பெண்களை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

Chennai Cannabis railway


வட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. தமிழகத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளை சோதனை செய்த போது 20 கிலோ கஞ்சாவுடன் ஒடிசாவைச் சேர்ந்த 2 பெண்களை ரயில்வே போலீசார் கைது செய்து உள்ளனர். பூரி வாராந்திர விரைவு ரயிலில் வந்த அவர்கள் கஞ்சாவுடன் பிடிபட்டுள்ளனர்.

ஒடிசாவைச் சேர்ந்த சரோஜினி, நளினி ஆகியோரிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளது ரயில்வே போலீஸ். ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் யாரிடம் விற்பனை செய்ய வந்தார்கள் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+