ஆவடி அருகே சோகம்.. கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இரு ஒப்பந்த தொழிலாளர்கள் பலி.. ஓனர் மீது வழக்கு
சென்னை: சென்னை ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் உரிமையாளர், மேற்பார்வையாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆவடியில் உள்ள மத்திய அரசின் ஓ.சி.எஃப் குடியிருப்பில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கினார்கள். அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டது. கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய ஒப்பந்த தொழிலாளர்களான மோசஸ் (45), தேவன் (55) ஆகியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் இருவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அவர்களின் உடலை மீட்டனர். இந்த விவகாரத்தில் ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் சம்பத், மேற்பார்வையாளர் மனோ ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இவர்களின் இறப்பு குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்கள் பயன்படுத்தப்படுவதும் அதில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications