சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன நடக்கிறது சென்னையில்.. மீண்டும் மூட்டைகளில் சிக்கிய கிழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் மூட்டை, மூட்டைகளாக கிழிந்த ரூபாய் நோட்டு

    சென்னை: சென்னை மாதவரத்தில் மீண்டும் 25 மூட்டைகளில் பழைய ரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    மாதவரம் ரவுண்டானாவில் இருந்து மஞ்சம்பாக்கம் செல்லும் வழியில் 20 மூட்டைகள் கத்தரிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    20 bags torn old 1000 rupees 500 rupees

    மாதவரம் ரெட்டேரி அருகே ஆட்டு மந்தை உள்ளது. இங்கு நேற்று கேட்பாரற்று பழைய 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் கத்தரிக்கப்பட்ட நிலையில் மூட்டைகளில் கிடந்தன. அதாவது மறுசுழற்சிக்காக கிழிக்கப்பட்ட நோட்டுகள் என கூறப்படுகிறது. மர்ம நபர்கள் மாதவரம் புழல் கொரட்டுர் போன்ற ஏரி கரைகளில் 35 மூட்டை பழைய கிழிந்த நோட்டுகளை திட்டமிட்டு வீசியுள்ளனர்.

    இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற மாதவரம் காவல்துறையினர் கேட்பாரற்று கிடந்த மூட்டைகளை பிரித்துப் பார்த்தனர். அதில் கத்தரிக்கப்பட்ட நிலையில் பழைய 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து கத்தரிக்கப்பட்ட பண மூட்டைகளை கைப்பற்றிய மாதவரம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், மாதவரத்தில் இன்று மீண்டும் 25 மூட்டைகளில் பழைய ரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக, பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர், பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தநிலையில், பழைய 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் கத்தரிக்கப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்டுள்ளது மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    20 Bags torned old 1000 and 500 rupees notes were recovered near Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X