”கோல்ட்ரிப்” இருமல் மருந்து சாப்பிட்டு 20 குழந்தைகள் உயிரிழப்பு.. உரிமையாளர் சென்னையில் கைது
சென்னை: இருமல் மருந்து குடிந்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அம்மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கோல்ட்ரிப் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ரங்கநாதன் இன்று அதிகாலையில் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை போலீசார் உதவியுடன் அசோக் நகர் வீட்டில் இருந்த ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை 14 குழந்தைகள் அண்மையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் திடீரென சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்பது கண்டறியப்பட்டது.

'கோல்ட்ரிப்' இருமல் மருந்து
இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய போது, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்படும், ஸ்ரீசன் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து மற்றும் மற்றொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட 'நெக்ஸ்ட்ரோ டி.எஸ்.' மருந்துகள் காரணம் என்பது தெரியவந்தது.
குழந்தைகளின் சிறுநீரகத்தை ஆய்வு செய்ததில் திசுவில் 'டை எத்திலீன் கிளைகால்' என்ற ரசாயன வேதிப்பொருள் இருந்தது தெரியவந்தது. பெயின்ட், மை போன்ற பொருட்கள் தயாரிக்க பயன்படும் ரசாயனம் ஆகும். இந்த ரசாயனம்தான் குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்தில் கலந்து இருந்தது தெரியவந்தது.
ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
இதையடுத்து, 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை தயாரிக்கும் மருந்து நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய பிரதேச அரசு கடிதம் எழுதியது. அதேபோல், மத்திய பிரதேசம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, இருமல் மருந்தை தயாரித்த நிறுவனத்தின் கிளை ஆலை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டது தெரியவந்தது. இந்த ஆலைக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். இருமல் மருந்து சாப்பிட்டதில் பலியான குழந்தைகள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்த நிலையில், சம்பந்தப்பட்ட இருமல் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய மத்திய பிரதேச போலீசார் தமிழகத்திற்கு வந்தனர்.
மருந்து நிறுவன உரிமையாளர் கைது
தமிழக போலீசார் உதவியுடன் இன்று அதிகாலை அசோக் நகர் வீட்டில் வைத்து மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications