20 கோடி பட்ஜெட்! ரஹ்மானின் ஏஐ ஹாலிவுட் ஸ்டுடியோ ரெடி: 100 ஏக்கர் பிரம்மாண்டம்
தமிழ் சினிமாவுக்குள் ஏ.ஆர்.ரஹ்மான் அடி எடுத்து வைத்த பிறகுதான் ஹாலிவுட் அளவுக்கான உயரத்தைத் தமிழர்கள் எட்டிப் பிடிக்க முடிந்தது. அதற்கு பைபாஸ் பாதை போட்டுக் கொடுத்தவர் ரஹ்மான். இப்போது அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வேலையை அவர் தொடங்கி இருக்கிறார். சொந்தமாக ஏ.ஆர். ஃபிலிம் சிட்டி ஒய்.எம் ஸ்டியோ தொடங்கி இருக்கிறார். அதற்கு யுஸ்ட்ரீம் என்ற ஸ்டியோவை ஆரம்பித்திருக்கிறார். மொத்தம் 100 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் அமைந்துள்ளது. வசதிக்கு ஏற்ப செட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.
இதில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஸ்டியோ உள்ளது. இன்னும் வரும் காலத்தில் இதனை 20 ஆயிரம் சதுர அடி அளவுக்கு அகலப்படுத்த உள்ளனர். இந்த ஏஆர் ரஹ்மான் ஃபிலிம் சிட்டி கும்மிடிப்பூண்டியில் உள்ளது. சென்னையிலிருந்து 2 மணிநேரம் பயணம்.

இது ஆர்ட் மற்றும் வெர்ச்சுவல் தொழில்நுட்பங்களுக்கான ஸ்டுடியோ. அதற்கான ஒரு தனித் தளம்தான் இது. இங்கே படப்பிடிப்புக்கான மேக் அப் ஸ்டியோ, காபி ஷாப் போன்ற செட்டுகள் என ஏராளமாகக் கட்டுமானங்கள் உருவாகி வருகின்றன. உள்ளே ஆடியன்ஸ் அமர்ந்து பார்க்கக் கூடிய மேடை ஒன்று உள்ளது. அதில் 3டி எஃபெக்ட் காட்சிகளைத் திரையிடுவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த மேடைக்கு வெளியே அந்தக் காலத்தில் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த அரிக்கேன் விளக்குகளை வைத்து அழகாக வடிவமைத்திருக்கிறார்கள். இது பற்றி ரஹ்மான் பேசும்போது, "யுஸ்ட்ரீம் உடன் சேர்ந்து இதைச் செய்துள்ளோம். இதைப்போன்ற வசதிகள் சென்னையில் இதுவரை இல்லை. ஹாலிவுட்டில்தான் உள்ளது. அதன்பின் ஆந்திரா, மும்பையில் வந்துள்ளது. ஆகவே, சென்னையில் அதை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்.

மக்கள் சினிமா மீது இருந்த ஆர்வம் குறைந்து வருகிறது. அதை அதிகப்படுத்த வேண்டும் என்றால் பிரம்மாண்டமான செட்டுகள் தேவை. ஏஐ தொழில்நுட்பம் தேவை. முழுக்க முழுக்க செட் போட்டால் படத்தின் பட்ஜெட் எகிறிவிடும். அதைக் குறைக்கவேண்டும் என்றால் இந்த மாதிரி ஸ்டுடியோக்கள் தேவை. ஒரு இடத்தில் 20 நாட்கள் மொத்தம் ஷூட் செய்ய வேண்டி இருந்தால், 3 நாட்கள் மட்டும் ரியலாக ஷூட் செய்துவிட்டு, மீதி உள்ள காட்சிகளை அப்படியே இந்த ஸ்டுடியோவுக்குள் உருவாக்கிவிடலாம்.
ரயில்வே நிலையம், கோயில் போன்ற பொது இடங்களில் அதிக நாட்கள் ஷூட்டிங் நடத்தை அனுமதி தரமாட்டார்கள். அங்கே ஒரு நாள் மட்டும் காட்சிகளை எடுத்துவந்துவிட்டால், அதை அடிப்படையாக வைத்து அப்படியே மீதம் உள்ள அனைத்து காட்சிகளையும் இங்கே உருவாக்கிவிட முடியும்" என்கிறார். இந்த ஸ்டுடியோவின் உரிமையாளர் ரஹ்மான் இல்லை. அவர் தனது நிலத்தை கொடுத்துள்ளார். அதில் யூஸ்ட்ரீம் கம்பெனி ஸ்டுடியோவை உருவாக்கியுள்ளது. இதன் மதிப்பு 20 கோடிக்கு மேல் வரும் என்கிறார் அதன் பங்குதாரர் ஸ்ரீதர். இவர் ஏஐ தொழில்நுட்பக் கலையில் அனுபவம் மிக்க நிபுணர்.

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு அதிகம் ஏற்படும் என்ற பேச்சு அடிப்படுகிறது. அதைப் பற்றிப் பேசும் போது ரஹ்மான், "யாருக்கும் இதனால் வேலை இழப்பு வராது. காட்சிகள் வெறுமனே பார்க்கச் சாதாரணமாக இல்லாமல், அதை மேலும் பிரம்மாண்டமாகக் காட்ட இந்தத் தொழில்நுட்பம் கைகொடுக்கும். இது சென்னைக்கும் தமிழ் சினிமாவுக்கும் தேவையான ஒன்று. இந்த வசதி முன்பு சென்னையில் இல்லை என்பதால் ஆந்திரா, மும்பை போக வேண்டி இருந்தது. அது இனிமேல் குறையும்" என்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications