20% ஓட்டு இருந்தாலே போதும்.. விஜய்க்கு எம்.எல்.ஏ கிடைப்பாங்க! அடித்துச் சொன்ன சபீர் அகமது! எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னபோதும் இல்லாத வகையில் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026ல் 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பது பெரிய அளவிலான விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் வாக்குப்பதிவு அதிகரிப்பதற்கு தமிழக வெற்றி கழகமும் ஒரு காரணம் என சொல்லப்படும் நிலையில் விஜய் எத்தனை சதவீத வாக்குகளை பெற்றால் அவர் எம்எல்ஏக்களை பெறுவார் என்ற விவாதம் சூடு பிடித்திருக்கிறது. இது தொடர்பாக பதில் அளித்திருக்கிறார் பிரபல பத்திரிகையாளரான சபீர் அகமது.

பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது 2026 தமிழக சட்டசபை தேர்தல். இந்த முறை வாக்கு சதவீதம் எஸ்ஐஆர் உள்ளிட்ட பணிகளால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நினைத்தது போலவே 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

Tamil Nadu Assembly Election 2026 TN Polls Vijay

ஒரு சில தொகுதிகளில் 93% என்ற எண்ணிக்கையை கூட தொட்டு இருக்கிறது. திமுக எதிர்ப்பு வாக்குகளை அதிமுகவும் தவெகவும் பங்கிட்டு கொண்டதால் அது திமுகவுக்கு தான் சாதகம் என ஒரு தரப்பும், தமிழக வெற்றி கழகம் இந்த தேர்தலில் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும் என மற்றொரு தரப்பும் கூறி வருகிறது.

இந்த நிலையில் 20% வாக்குகளை பெற்றால் விஜய்க்கு தமிழக சட்டசபைக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது என கூறியிருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளரான சபீர் அகமது. இது தொடர்பாக விவாதம் ஒன்றில் பேசிய அவர்," விஜய்க்கு 25 சதவீத வாக்குகளுக்கு மேல் வந்தால் அது எம்எல்ஏ சீட்டுகளாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த எண்களும் அதைத்தான் சொல்கிறது. உறுதியாக அவருக்கு எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த பகுதிகளில் வாக்கு விழுந்து இருக்கிறது என்பது இன்னும் சிறிது நேரத்திற்கு பிறகு தான் தெரியும்.

ஏனெனில் வாக்கு சதவீதமானது தற்போது வரை சிறிது சிறிதாக மாறிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னையில் அவர்கள் அதிக வாக்குகளை பெறுவார்கள் என சொல்லப்படும் நிலையில். 30 சதவீதம் வாக்குகளை பெற்றாலே அது எம்எல்ஏ சீட்டுக்களாக மாறும் வாக்குப்பதிவு ஆரம்பத்தின் போது இளைஞர்கள் அவர்களுடன் வந்த பெரியவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததை பார்க்க முடிந்தது ஏதோ ஒரு முடிவு எடுத்து தான் அவர்கள் வாக்கு மையங்களுக்கு வந்தார்கள் என்பதை பார்க்க முடிகிறது

பெரும்பாலும் அதிகாலை முதல் நண்பகல் 2 மணி வரை வாக்களித்துவிட்டு சென்றுவிட்டதை பார்க்க முடிந்தது. திருச்சியில் உள்ளிட்ட நகரங்களில் மாலை அதிக அளவில் வாக்குப்பதிவு நடக்கவில்லை. காரணம் காலையிலேயே அவர்கள் ஓட்டு போட்டு விட்டார்கள். இதன் மூலம் அவர்கள் ஏதோ ஒரு உந்துதலில் இருந்ததை பார்க்க முடிந்தது.

நகர்ப்புற பகுதிகளில் விஜய்க்கு அதிக அளவில் வாக்குகள் இருக்கிறது. என்னை பொருத்தவரை புறநகர் பகுதிகளிலும் விஜய்க்கு நல்ல வாக்கு சதவீதம் உள்ளது. குறிப்பாக நன்கு அறிந்த பலம் பொருந்திய வேட்பாளர்கள் இருக்கும் தொகுதிகளில் விஜய்க்கு வாய்ப்பு இருக்கிறது. வேட்பாளர்களில் தேர்தல் மேலாண்மை செய்யக்கூடிய வேட்பாளர்களும் நிறைய பேர் இருந்தார்கள். உதாரணத்திற்கு கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட தொகுதிகளை சொல்லலாம்.

அவர்கள் தேர்தல் கள நிலவரத்தை புரிந்து கொண்டு பணியாற்றினார்கள். இவற்றையெல்லாம் தாண்டி ஒரு சிறப்பான சம்பவத்தை தவிர்க்க செய்திருக்கிறது. 20 சதவீத வாக்குகள் என்பதே ஒரு மிகப்பெரிய நம்பர் தான். இரண்டு வருடத்திற்குள் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி 20 சதவீத வாக்குகளை பெறுவது சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள் என்றால் அது மிகப்பெரிய விஷயம்தான். அது சட்டமன்ற தொகுதிகளாக கன்வெர்ட் ஆகுமா என்பது தான் பார்க்க வேண்டும் . தேர்தலுக்கு முன்பு வரை 200 தொகுதிகளில் வெல்வோம் என சொன்ன திமுக தற்போது அதில் பேச்சில் மாற்றம் தெரிகிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+