சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பணிகளை புறக்கணித்து விட்டு.. கோரிக்கைக்காக தலைமைச் செயலகத்தின் உள்ளே கூடிய 200 ஊழியர்கள்.. பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: பணிகளை புறக்கணித்துவிட்டு சென்னை தலைமைச் செயலகத்தின் உள்ளே 200 ஊழியர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் கடை நிலை ஊழியர்கள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் தளத்தில் உள்ள மனிதவளத் துறை செயலாளர் மைதிலியின் அறை முன்பு திடீரென ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

ஓராண்டுக்கும் மேல் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என கூறி திடீரென நேர்முக எழுத்தர், தட்டச்சர், உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளை செய்து வரும் 200 க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்துவிட்டு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அமைச்சர்கள், ஆணையர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோரின் கீழ் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் சொல்லும் ஆவணங்களை டைப் செய்து தயார் செய்து கொடுப்பது தட்டச்சர்களின் பணியாகும்.

தற்காலிக ஆசிரியர்கள், ஊழியர்கள் 60 வயது வரை பணியில் தொடரலாம்.. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு!தற்காலிக ஆசிரியர்கள், ஊழியர்கள் 60 வயது வரை பணியில் தொடரலாம்.. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு!

 ஆகஸ்ட் மாதம்

ஆகஸ்ட் மாதம்

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே தங்களுக்கான பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஓராண்டுக்கு மேல் ஆகியும் வழங்கப்படாமல் அவை அனைத்தும் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த காலிப்பணியிடங்களுக்கு தங்களை பதவி உயர்வில் பணியமர்த்தாமல் டிஎன்பிஎஸ்சி மூலம் ஆள்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

 டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆள்களை எடுத்தால் நாங்கள் தற்போது இருக்கும் அதே கிரேடில் இருக்க வேண்டிய சூழல் இருக்கும். மேலும் எங்களுக்கு பதவி உயர்வு கொடுத்தால் ஒவ்வொருவருக்கும் மாத ஊதியம் ரூ 10 ஆயிரம் முதல் ரூ 20 ஆயிரம் வரை கூடுதலாக கிடைக்கும். இதை தவிர்க்கவே தமிழக அரசு எங்களுக்கு பதவி உயர்வை கொடுக்காமல் உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

 பதவி உயர்வு

பதவி உயர்வு

தங்களுக்கு பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக துறை செயலாளர்கள், முதல்வரின் நேர்முக செயலாளர்கள் உள்ளிட்டோரிடம் கடந்த ஓராண்டாக கோரிக்கை மனுக்களை கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார்கள். இதனால் மனிதவளத் துறை செயலாளர் மைதிலியை சந்தித்து அவரிடம் மனு அளிக்க காத்திருக்கிறார்கள்.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

அவர் வரும் வரை பணிகளை புறக்கணிப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள். செயலாளர் மைதிலி அமைச்சருடன் ஆலோசனை கூட்டத்தில் இருப்பதால் தற்போது பணிக்கு திரும்புங்கள், ஆலோசனை கூட்டம் முடிந்தபிறகு உங்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிகிறேன் என தெரிவித்திருந்தார். ஆனால் இதை ஏற்க ஊழியர்கள மறுத்து, ஏற்கெனவே பல முறை கோரிக்கைகளை கொடுத்தும் பயனில்லை, எனவே நாங்கள் கொடுக்கும் மனுவை ஏற்பீர்களா ஏற்க மாட்டீர்களா என்பதற்கு பதில் கிடைத்தால் மட்டுமே திரும்பி செல்வோம் என கூறியுள்ளனர். இதனால் பல்வேறு அரசு பணிகள் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

English summary
200 more employees gathered at Human resources department's Secretary Mythili's room in TN Secretariat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X