அவமானம்.. அமெரிக்காவையே அசரவைத்த மோசடி.. மீண்டும் முறைகேடு செய்த சில "தெலுங்கர்கள்".. ஷாக்
சென்னை: அமெரிக்காவின் பிரபல பைனான்ஸ் நிறுவனமான ஃபேனி மே, சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. விதிமுறைகளை மீறி உள்ளதாகவும், நிறைய முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இப்படி பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தெலுங்கர்கள். 200 இந்திய-அமெரிக்க பணியாளர்கள் ஃபென்னி மே என்று அழைக்கப்படும் பெடரல் நேஷனல் மார்ட்கேஜ் அசோசியேஷனில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் அந்த நிறுவனம் வழங்கும் நிதி உதவி, பொருளாதார உதவிகளை அங்கே பணியாற்றும் தெலுங்கர்கள் தவறாக பயன்படுத்தி உள்ளனர். இதை வைத்து பல கோடிகளை மோசடி செய்துள்ளனர்.

அந்த நிறுவனத்தின் grants programme. எனப்படும் நிதி உதவி திட்டத்தை பயன்படுத்தி இவர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு நிறுவனமும் வரிகளை குறைக்க நிதி உதவிகளை செய்யும். இதற்காக ஊழியர்கள் சார்பாக தொண்டு நிறுவனங்களுக்கு நிதி கொடுப்பார்கள். ஆனால் இதை தெலுங்கர்கள் சிலர் முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர்.
அதன்படி தெலுங்கர்கள் சிலர் சேர்ந்து பொய்யாக தொண்டு நிறுவனங்களை உருவாக்கி உள்ளனர். அல்லது தங்களுக்கு தெரிந்த தொண்டு நிறுவனங்கள் மூலம் இவர்கள் தங்களின் நிறுவனத்திடம் இருந்தே நிதி உதவிகளை பெற்றுள்ளனர். பின்னர் அந்த நிதி உதவிகளை தங்களின் சொந்த சேவைக்கு பயன்படுத்தி உள்ளனர்.
உதாரணமாக நீங்கள் ஃபென்னி மே நிறுவன ஊழியர் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் நிறுவனம் வருமான வரியை குறைக்க தொண்டு நிறுவனங்களுக்கு உதவும். நீங்களும் உங்கள் வருமான வரியை குறைக்க தொண்டு நிறுவனத்திற்கு உதவி செய்யலாம். இதற்கு என்று நீங்கள் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு பணம் கொடுத்ததாக கணக்கு காட்டுகிறீர்கள். அதேபோல் உங்கள் நிறுவனத்தின் நிதியையும் அந்த தொண்டு நிறுவனத்திற்கு நிதி கொடுக்க வைக்கிறீர்கள்.
கடைசியில் பார்த்தால் அந்த தொண்டு நிறுவனமே உங்களுடையது. அல்லது உங்களுக்கு தெரிந்தவருடையது. கடைசியில் உங்களின் தொண்டு பணமும், உங்கள் நிறுவனத்தின் தொண்டு பணமும் தொண்டு நிறுவனம் வழியாக மீண்டும் உங்கள் பாக்கெட்டுக்கே வருகிறது. இந்த முறைகேட்டைத்தான் அந்த தெலுங்கர்கள் அங்கே செய்துள்ளனர்.
இதன் காரணமாகவே பிரபல பைனான்ஸ் நிறுவனமான ஃபேனி மே, சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. விதிமுறைகளை மீறி உள்ளதாகவும், நிறைய முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பல ஊழியர்கள் வட அமெரிக்காவின் தெலுங்கு சங்கத்துடன் (தானா) இணைந்து நிறுவனங்களை ஏமாற்றி நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Telugu Association of North America (TANA) அமைப்பு விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளது.
நேற்று பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் ஒருவர் தானாவில் பிராந்திய துணைத் தலைவராக இருந்ததாகவும், மற்றொருவர் அமெரிக்க தெலுங்கு சங்கத்தின் (ATA) முன்னாள் தலைவரின் மனைவி என்றும் கூறப்படுகிறது. TANA அமைப்பு மட்டும் சம்பந்தப்பட்ட அமைப்பு அல்ல, மற்ற சங்கங்களும் விசாரணையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்பிள் சம்பவம்
சமீபத்தில்தான் ஆப்பிள் நிறுவனத்தில் நடந்த ஊழல் ஒன்று அமெரிக்காவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அங்கே 185 தெலுங்கு மொழி பேசும் (ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள்) ஊழியர்களை ஆப்பிள் நிறுவனம் வேலையில் இருந்து நீக்கி உள்ளது.
Bay Area அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை நீக்கி ஆப்பிள் நிறுவனம் உத்தரவிட்டு உள்ளது. Matching Grants program திட்டத்தில் தெலுங்கர்கள் முறைகேடு செய்த நிலையில் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம் ஒரு சிஎஸ்ஆர் திட்டத்தை நடத்தி வருகிறது. அதாவது தொண்டு வழங்குவதற்கான திட்டம் இது. இந்த திட்டத்தின் படி.. இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் ஒரு அமைப்பிற்கு தொண்டு வழங்க நினைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் அந்த பணத்தை தருவதற்கு பதிலாக ஆப்பிள் நிறுவனம் வழங்கிவிடும். ஒருவேளை நீங்கள் தொண்டு நிறுவனத்திற்கு பணம் கொடுத்துவிட்டால் அதை கணக்கு காட்டி ஆப்பிள் நிறுவனத்திடம் refund பெற்றுக்கொள்ளலாம்.
இதன் மூலம் அந்த ஊழியர் வருமான வரி விலக்குகளை பெற முடியும். அதாவது நீங்கள் தொண்டு செய்யும் பணத்திற்கு வருமான வரி விலக்கு பெறுவீர்கள்.. தொண்டு செய்ய வேண்டிய தொகையை ஆப்பிள் நிறுவனமே தொண்டு செய்ய வேண்டிய அமைப்பிடமோ அல்லது உங்களிடமோ கொடுத்துவிடும். தொண்டு காரியங்களை ஊக்கப்படுத்தும் விதமாக இப்படி செய்துள்ளனர். தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே இப்படி நிதி தர முடியும்.
தெலுங்கு ஆப்பிள்
ஆனால் சில தெலுங்கர்கள் இதை வைத்து முறைகேடு செய்துள்ளனர். இவர்கள் தெலுங்கு அமைப்பு ஒன்றிற்கு டொனேஷன் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த தொகையை ஆப்பிள் நிறுவனம் அந்த தெலுங்கு ஊழியர்களுக்கு வழங்கி உள்ளது. அதாவது நாங்கள் தெலுங்கு தொண்டு அமைப்பு ஒன்றிற்கு நிதி உதவி அளித்துவிட்டோம்.. அதற்கான ஆவணங்கள் இங்கே உள்ளது .. என்று கூறி ஆப்பிள் நிறுவனத்திடம் அதற்கான தொகையை வாங்கிக்கொண்டனர். ஒன்று.. இரண்டு அல்ல.. பல லட்சம் ரூபாயை இவர்கள் தொண்டாக வழங்கி உள்ளனர்.
இதுவரை ஊழல் எதுவும் நடக்கவில்லை. இதற்கு பின்தான் ஊழல். அந்த தெலுங்கு ஊழியர்கள் தெலுங்கு அமைப்பு ஒன்றிற்கு நிதி வழங்கியதாக கூறினார்களே. அந்த தெலுங்கு அமைப்பே அவர்களுக்கு சொந்தமானதுதான்.. அதாவது தங்களுடைய தொண்டு அமைப்பிற்கே நிதி உதவி தருவதாக கணக்கு காட்டி.. அந்த காசை இவர்களே கடைசியில் எடுத்துக்கொண்டு.. ஆப்பிள் வழங்கும் தொகையையும் எடுத்துக்கொண்டு.. வரி விலக்கையும் பெற்றுள்ளனர். பல லட்சங்களை இப்படி முறைகேடு செய்துள்ளனர்.
ஒருவர் இருவர் அல்ல.. மொத்தம் 185 தெலுங்கர்கள் இப்படி முறைகேடு செய்துள்ளனர். ஆப்பிள் நிறுவனம்.. என்ன திடீரென பல தெலுங்கு ஊழியர்கள் நிதி உதவி செய்கிறார்களே.. அதுவும் பல லட்சத்திற்கு எல்லாம் தொண்டு செய்கிறார்களே என்று சந்தேகப்பட்டு விசாரணை செய்ததில் இந்த முறைகேடு அம்பலம் ஆகி உள்ளது. கணக்கு எடுத்து பார்த்ததில் எல்லாம் தெலுங்கு ஊழியர்கள்.. பணம் போனதெல்லாம் ஒரே நிறுவனத்திற்கு.. நிறுவனத்தின் பின்புலத்தை ஆய்வு செய்தால் அதை நடத்துவதும் அதே ஊழியர்கள்தான்.
இந்த திட்டத்தில் முறைகேடு செய்த 185 தெலுங்கர்களும் வேலையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இதில் பலர் சீனியர் மேனஜர் பொறுப்பில் இருந்தவர்கள். இவர்களை பிளாக் லிஸ்ட் செய்யும் திட்டத்தையும் ஆப்பிள் நிறுவனம் கையில் எடுத்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications