சர்வேயர்கள் வரப்போறாங்க.. நிலத்தை துல்லியமாக அளக்க வந்தாச்சு ரோயர் கருவி.. சொன்னதை செய்த தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் நிலங்களை அளந்து, எல்லைகளை வரையறை செய்யும் பணிகளை, டிஜிட்டல முறைக்கு மேம்படுத்த, நில அளவை துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், கடந்த 2023ல், 150 ரோவர் கருவிகள் வாங்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 200 ரோவர் கருவிகளை வாங்க போவதாக, சமீபத்தில் நில அளவை துறை முடிவு செய்திருந்தது.. இக்கருவிகளின் பயன்பாடு, முக்கியத்துவம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்த மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது நிலம் வாங்குவோருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
தமிழகத்தில் பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல் தொடர்பான நில அளவை சேவைகளின் தரத்தினை மேம்படுத்த வேண்டிய அவசியம் சமீப நாட்களாகவே எழுந்து வருகிறது.. மேலும், பட்டா மாறுதல், உட்பிரிவு உருவாக்குவதில் நிலத்தின் எல்லைகள், பரப்பளவு போன்றவற்றில் பிழைகள் ஏற்படுவதால், அதனையும் களைய வேண்டிய அவசியம் வந்துள்ளது..

இவைகளை கருத்தில் கொண்டுதான், நில அளவை பணியில் தரக்கட்டுப்பாடு வழிமுறைகளை அமல்படுத்த, நம்முடைய தமிழக அரசு முடிவெடுத்தது.. அத்துடன், சர்வே எண், அதன் உட்பிரிவு எண்ணுக்குட்பட்ட நிலத்தின் அளவை, துல்லியமாக தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.
சர்வேயர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
மேலும், நிலங்களை அளந்து, எல்லைகளை வரையறை செய்யும் பணிகளை, நில அளவை துறை மேற்கொண்டு வரும் நிலையில், வகைப்பாட்டுக்கு ஏற்ப நிலங்களை அளந்து, சர்வே எண் ஒதுக்குதல் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.. அத்துடன், பொதுமக்கள் விண்ணப்பித்தவுடன் நில அளவையை உடனுக்குடன் செய்து தருவதற்காக, சர்வேயர்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, நிலத்தை ஜிபிஎஸ் முறையில் துல்லியமாக அளக்க, 200 ரோவர் கருவிகள் வாங்குவதற்கு நில அளவை துறை நடவடிக்கை எடுக்க போவதாகவும் தகவல் வெளியானது.. கடந்த 2023ம் ஆண்டு, 150 ரோவர் கருவிகள் வாங்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 200 ரோவர் கருவிகளை வாங்க, நில அளவை துறை முடிவு செய்தது..
200 ரோவர் கருவிகள்
இந்நிலையில், நிலங்களை துல்லியமாக அளக்க, 200 ரோவர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது..
நம்முடைய பாரம்பரிய நடைமுறைகளுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட் பங்களை பயன்படுத்த, புதிய கருவிகள் வாங்குவதற்கும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நில அளவை துறைக்கு புதிதாக, 200 ரோவர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகளை, 10 மாவட்ட நில அளவை துறை பணியாளர்களுக்கு, வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தற்போது வழங்கியிருக்கிறார்.
அதென்ன ரோவர் கருவிகள்?
பாரம்பரிய நடைமுறைகளுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அதன்மூலம், நிலத்தின் அளவு மற்றும் நிலம் எங்கிருக்கிறது என்பதையும், எங்கிருந்து வேண்டுமானாலும் அறிந்து கொள்ள, புதிய வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.. இதற்குதான், ரோவர் கருவிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
அதிக பரப்பளவு நிலங்களை மிக குறுகிய நேரத்தில் அளப்பதற்கு இந்த ரோவர் கருவிகளே பேருதவியாக இருக்கும்.. இந்த ரோவர் கருவியின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் என்கிறார்கள்.. தற்போது, தமிழக அரசு 200 ரோவர் கருவிகள் வாங்கி, நில அளவைத்துறை பணியாளர்களுக்கும் ஒதுக்கியிருப்பது, வருவாய்த்துறையின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications