பாஜக 200 சீட் தாண்டாது? வடநாடு சொல்லும் கள நிலவரம்! திமுக ‘குஷி’
சென்னை: பாஜகவுக்கு இந்த முறை 200 சீட்டுகள்தான் கிடைக்கும் என்று ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க வானொலி, தொலைக்காட்சி, யூடியூப் என்று எந்த ஊடகத்தைத் திறந்தாலும் பாஜகவின் தேர்தல் விளம்பரம்தான் வருகிறது.

கடந்த சில நாட்களாக பாஜக பக்கத்தைப் பின்தொடருங்கள் என்று சுட்டிக்காட்டுகிறது யூடியூப். அது ஒரு Sponsored விளம்பரம். இப்படி ஒருநாளைக்கு எக்கச்சக்க விளம்பரங்களை பாஜக அரசு செய்து வருகிறது.
திரும்பிய பக்கம் எல்லாம் மோடியின் முகம் ஊக உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
இதே அளவுக்கு திமுகவின் விளம்பரமும் கடந்த சில தினங்களாக வானொலியில் காதைக் கிழிக்கிறது. தொலைக்காட்சியில் பிரச்சார அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்தத் தேர்தலில் பாஜக Vs திமுக ஆகிய இருகட்சிகளுக்கான போட்டி பலமாக இருக்கப் போகிறது.
தேசிய ஊடகங்கள் பாஜக திரும்ப 350 இடங்களைப் பிடிக்கும் என்கின்றன. அதற்கு இணையாக உள்ளூர் செய்தி நிறுவனங்களின் கருத்துக் கணிப்பும் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளன.
'இவை கருத்துக் கணிப்புகள் அல்ல; கருத்து திணிப்புகள்' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் 'தராசு' ஷாம். அவருக்குக் கிடைத்துள்ள தரவுகளின் படி பாஜக 200 இடங்களைத் தாண்டுவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்.
அது எப்படி? இது குறித்துப் பேசிய 'தராசு' ஷ்யாம், "பாஜக 370 தொகுதிகளை வெல்வோம் என்கிறது. அதற்கு என்ன அர்த்தம் என்று பிரதமர் மோடியே விளக்கியுள்ளார். பாஜக ஆட்சியில் காஷ்மீரிலிருந்த சட்டப் பிரிவு 370 ஐ ரத்து செய்யப்பட்டது.

ஆகவே அந்த எண்ணைக் குறிப்பிடுவதாகப் பிரதமர் சொல்லி இருக்கிறார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலத்தை வருகின்ற ஜூன் வரை நீட்டித்திருக்கிறார்கள்.
அந்தக் கூட்டத்தில், 'பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சியாமா பிரசாத் முகர்ஜி. அவர் காஷ்மீரில் உள்ள 370 சட்டத்தை ரத்து செய்வதைத்தான் கனவாகக் கொண்டிருந்தார். அதை நாம் நிறைவேற்றி உள்ளோம். ஆகவே 370 இடங்களில் நாம் வெற்றி பெறவேண்டும்' என்று மோடி பேசி உள்ளார்.
அதன்பிறகு அடுத்த தேர்தலில் 420. அதாவது Four twenty என்கிறார்கள். பாஜகவை எதிர்க்கும் Four twenty களை ஒழிப்பதுதான் இலக்கு என்று பாஜகவினர் கூறி வருகிறார்கள். என்னை பொறுத்தவரை 370 என்பதே ஒரு Four twenty கருத்தாக்கம்தான்.

கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு திட்டமிட்டு அனைத்து துறைகளிலும் தங்களின் ஆதிக்கத்தை நுழைத்து இருக்கிறது. இந்த நாட்டில் உள்ள சுதந்திரமான அமைப்புகளை அனைத்தையும் பாஜகவினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள்.
உதாரணமாக Food Corporation of India பற்றிச் சொல்கிறேன். இது இந்தியா முழுவதும் உணவுக் கொள்முதல் செய்யக்கூடிய ஒரு நிறுவனம். இந்த அமைப்பு வெள்ளைக்காரர்கள் ஆட்சியிலிருந்து உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலமும் உணவை நேரடியாகக் கொள்முதல் செய்ய முடியாது.
மாநில அரசு நெல் கொள்முதல் செய்கிறது என்றால், Food Corporation of India வின் முகவராக இருந்து கொள்முதல் செய்கிறது. இந்த அமைப்பு என்ன சொல்கிறது என்றால், எல்லா நியாயவிலைக்கடைகள் முன்பாகவும் பிரதமர் மோடிக்கு செஃல்பி பாயிண்ட் வைக்க வேண்டும் என்கிறது. அதாவது ரேஷன் பொருட்கள் வாங்க வருபவர்கள் மோடியுடன் செஃல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், எஃப்சிஐ என்பது மத்திய அரசின் நிறுவனம். இது மோடிக்காகத் தேர்தல் பணியைச் செய்கிறது. இதுவே இப்படி என்றால், தேர்தல் ஆணையத்தை எதில் கொண்டுபோய் சேர்ப்பது? அப்புறம் ஏன் 370 இடங்களைப் பிடிப்போம் என்று பாஜக சொல்லாது?
மகாராஷ்டிராவில் எனக்கு ஒரு ஊடக நண்பர் உள்ளார். அவர் வடநாட்டு அரசியலில் அதிக அறிவு கொண்டவர். அவர் '200 சீட்டுகள் கூட பாஜக வராது. பாஜக வேண்டும் என்றே பில்ட் அப் செய்கிறது. சர்வே எடுத்து வெளியிடும் நிறுவனங்களை ஏதோ ஒரு வழிகளில் பாஜக ஆதிக்கம் செய்கிறது.
மராட்டி பத்திரிகையில் வரும் கருத்துக்கணிப்பு கூட பாஜகதான் வெல்லும் என்று செய்தி போடுகிறது. ஆனால் உண்மையில் கள நிலவரம் அப்படி இல்லை. பொருளாதாரத்தில் மக்கள் மிகவும் பின் தங்கிப் போய் உள்ளனர். ஆகவே, மக்கள் கொதித்துப் போய் உள்ளனர்.

வெறுமனே சிறுபான்மையினர் மட்டும் பாஜகவுக்கு எதிராக உள்ளதாகப் பலர் சொல்கிறார்கள். அப்படி இல்லை. தலித் மக்கள் கூட பாஜகவுக்கு எதிராக உள்ளனர். மேல் சாதியைத் தவிர்த்துப் பல இடைநிலை சாதிகள் மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு எதிராக உள்ளன. அதை நான் களத்தில் நேரடியாகப் பார்க்கிறேன்.
உதாரணமாக உபியில் மாயாவதி தனியாக நின்று ஓட்டைப் பிரித்தாலும் பாஜகவுக்கு அந்த வாக்குகள் சாதகமாக இருக்காது. மக்கள் பாஜகவை வீழ்த்தும் அதிகாரம் கொண்ட சமாஜ்வாதி கட்சிக்குத்தான் ஓட்டை போடுவார்கள்.
கடந்த முறை பாஜக 300 இடங்களை வென்றுள்ளது. அதில் 220 சீட்டுகள் எந்த மாநிலத்திலிருந்து கிடைத்தன எனச் சின்ன கணக்குப் போட்டுப் பார்ப்போம். அதாவது உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத் என இந்த ஆறு மாநிலங்களிலிருந்து அந்த சீட்டுகள் கிடைத்துள்ளன.

கிட்டத்தட்ட 100% வெற்றியைக் கடந்த தேர்தலில் பாஜக இந்த மாநிலங்களில் பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் அங்கே அதே அளவுக்கான இடங்களை பாஜக பெறாது. சுமார் 50 சீட்டுகள் இந்த மாநிலங்களில் பாஜகவுக்கு இந்த முறை குறையும். அப்படிப் பார்த்தாலே 250 இடங்கள்தான் கிடைக்கும்.
அதைவிட்டால் ஏழு வடகிழக்கு மாநிலங்களில் பாஜக கடந்த முறை பல இடங்களில் வென்றுள்ளது. இந்த வடகிழக்கு மாநிலங்களில் பாஜக 70 இடங்களில் இந்த முறை தோல்வியைச் சந்திக்கும். மேற்கு வங்கத்தில் மாநிலக் கட்சியான மம்தா வென்றால் அது பாஜக கணக்கில் வராது. பாஜக எதிராகத்தான் அமையும்.

ஒடிசாவிலும் அதே நிலைதான். நவீன் பட்நாயக் மத்தியில் யார் பெரும்பான்மையாக ஆளும் கட்சியாக வருகிறார்களோ அந்தக் கட்சியைத்தான் ஆதரிப்பார். பாஜக இத்தனை இடங்களை இழந்தால் பெரும்பான்மை கிடைக்காது. ஆகவே ஒடிசா முதல்வரும் பாஜகவை ஆதரிக்க மாட்டார்.
இப்படிப் பார்த்தால் பாஜக இந்த முறை 200 இடங்களில்தான் வெல்லும். அதற்கான வாய்ப்புதான் உள்ளது. ஆனால், ஊடகங்களை கைக்குள் போட்டுக் கொண்டு பாஜக பொய்யான கருத்துக் கணிப்பை வெளியிட வைத்து மக்களை நம்ப வைக்க முயற்சி செய்து வருகிறது. அது விரைவில் உடைந்துபோகும்' என்று எனது நண்பர் சொல்கிறார். அதில் உண்மை உள்ளது போல் எனக்குத் தோன்றுகிறது" என்கிறார் ஷ்யாம்.


-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications