“ஷாக்”.. அரசு பேருந்துகளில் இன்று முதல் ரூ.2000 நோட்டு செல்லாது! நடத்துனர்களுக்கு பறந்த ஆர்டர்
சென்னை: செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முதல் இந்தியாவில் ரூ.2000 நோட்டுக்கள் செல்லாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு இருக்கும் நிலையில், அரசு பேருந்துகளில் பயணிகளிடம் ரூ.2000 நோட்டுக்களை பெற வேண்டாம் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்திற்குள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்தின் கணக்குத் துறை மேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி/ தூத்துக்குடி/ நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி/நாகர்கோவில் மண்டலத்தின் உதவி மேலாளர் ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "இந்திய ரிசர்வ் வங்கி 19.05.2023 தேதி அறிக்கையில் ரூபாய் 2000 இந்திய நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறும் முடிவை அறிவித்துள்ளது. இருப்பினும் ரூபாய் 2000 இந்திய நோட்டுகள் சட்டபூர்வமான டெண்டராக இருக்கும். மேலும் 30 செப்டம்பர் 2023 தேதி வரை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
மேலும் ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.20,000/- வரை வங்கியில் வரவு வைக்க முடியும் அல்லது மாற்றிக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 2000 ரூபாய் நோட்டுகளை கழகத்தால் வங்கியில் செலுத்த இயலாத நிலை உள்ளதால், 23.05.2023 ஆம் தேதி முதல் நடத்துனர்கள் அனைவரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் பக்குவமாக எடுத்துரைத்து 2000 ரூபாய் நோட்டுகளை வழித்தடத்தில் வாங்குவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் வசூல் தொகையை பிறரிடம் மாற்றம் செய்வதையும் தவிர்க்கும்படி தகுந்த அறிவுரை வழங்குமாறு பொது மேலாளர் மற்றும் அனைத்து கிளை மேலாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தினசரி ஒவ்வொரு கிளையிலும் நடத்துனர்களால் செலுத்தப்பட்ட வசுல் தொகையில் 2000 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் மண்டல கணக்கு பிரிவு வாயிலாக மத்திய கணக்கு பிரிவிற்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications