2000 ரூபாய் நோட்டு டாஸ்மாக் கடைகளில் வாங்க தடையா? தவறான செய்தி என்கிறார் செந்தில் பாலாஜி
சென்னை: புழக்கத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் 2,000 நோட்டுகள் வாங்கக் கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிந்தைய காலத்தில் டாஸ்மாக் நிறுவனம் ரூ.800 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தியது பற்றி விளக்கமளிக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருமானவரித்துறை ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் ஆட்சியாளர்கள் நடத்திய மிகப்பெரிய அளவிலான கறுப்புப் பணப் பரிமாற்றம் அம்பலமாகவிருக்கிறது என்று அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு முதல் ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன்பின் எரிபொருள் விற்பனை நிலையங்கள், பேருந்து பயணம், ரயில் முன்பதிவு டிக்கெட் உள்ளிட்ட சில அத்தியாவசியத் தேவைகளை மட்டும் பழைய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொள்ளலாம் என விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தமே இல்லாமல் அரசு மதுக்கடைகளிலும் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மது வாங்கிக் கொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாயின.
ஆனால், பெரும்பாலான கடைகளில், பெரும்பாலான நேரங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால், டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலமாக மட்டும் ரூ.800 கோடிக்கும் அதிகமாக பழைய ரூபாய் நோட்டுகள் வங்கியில் செலுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை ஆணையிட்டுள்ள நிலையில், ஊழியர்கள் மீது பழி போட்டு இந்த சிக்கலில் இருந்து தப்புவதற்கான முயற்சியில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது.
மதுக்கடைகளில் மது விற்பனைக்காக பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது என ஆணையிடப்பட்டிருந்த நிலையில், அதையும் மீறி பழைய நோட்டுகளை வாங்கி வங்கியில் செலுத்தியது ஏன்? என்று விளக்கம் கேட்டு பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. இதையே காரணம் காட்டி வருமானவரித்துறை விசாரணையிலிருந்து தப்பவும் டாஸ்மாக் திட்டமிட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் அமைச்சர்களைக் காப்பாற்ற அப்பாவி பணியாளர்களை பலிகொடுக்க டாஸ்மாக் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதை வருமானவரித்துறை அனுமதிக்கக்கூடாது.
உண்மையில், மதுக்கடைகளில் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தான் வாய்மொழியாக ஆணையிட்டிருந்தனர். ஆனாலும் கூட மது வாங்க வந்தவர்களிடம் இருந்து அதிக எண்ணிக்கையில் பழைய ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை. மாறாக அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பினாமிகள் மூலமாகத் தான் ஒவ்வொரு மதுக்கடையிலும் தினமும் ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரை பழைய ரூபாய் நோட்டுகள் கட்டாயமாக மாற்றப்பட்டன. இந்த வழியில் தான் அமைச்சர்களின் ரூ.800 கோடி கறுப்புப் பணம் மிகத் தந்திரமாக வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டது. தமிழக ஆட்சி நிர்வாகத்தின் உயர் பதவியில் இருப்பவர், அவருக்கு ஆதரவாக செயல்படும் சில அமைச்சர்கள் அடங்கிய கூட்டணி தான் கடந்த காலங்களில் ஊழல் மூலம் குவித்த பணத்தை அரசு அமைப்புகளின் மூலம் வெள்ளைப் பணமாக மாற்றியுள்ளனர் என்றும் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனிடையே நேற்றிரவு ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23ஆம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட உடனே டாஸ்மாக் நிர்வாகம் டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என்று அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. அதையும் மீறி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால், அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்று டாஸ்மாக் நிர்வாகம் கூறியதாகவும் தகவல் வெளியானது.
2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில் 2000 ரூபாய் நோட்டினை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பண பதுக்கல்காரர்களுக்கும் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே டாஸ்மாக் மூலம் 2000 ரூபாய் பணத்தை மாற்ற யாரும் முயற்சி செய்யக்கூடாது என்பதனாலே உடனடியாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியானதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்க எந்தவித தடையுமில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் 2,000 நோட்டுகள் வாங்கக் கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என்றும் கூறியுள்ளார். ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிவிப்பால் 2000 ரூபாயை எளிதில் மாற்றலாம் என பலரும் குஷியடைந்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications