2017ல் சசிகலாவுக்கு நடந்தது.. 26ல் விஜய்க்கு நடக்குதே! எல்லாத்தையும் ’மேல’ இருக்குறவன் பாத்துப்பான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வென்று தனி பெரும் கட்சியாக உருவாகி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் எனக் கூறிய ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்காமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சசிகலாவை போலவே விஜயும் ஆளுநரால் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 2017இல் சசிகலாவுக்கு நடந்தது, 2026இல் இப்போது விஜய்க்கு நடக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழ்நாடு அரசியல் களம் சென்று கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பாராத வகையில் 108 தொகுதிகளில் வென்று தமிழகத்தின் தனிப் பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவெடுத்தது. விஜய் முதல்வராக போகிறார் என அந்த கட்சியினர் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர்.

Sasikala Vijay Governor

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் விஜய்க்கு தனது ஆதரவை தெரிவிக்க ஆளுநர் மாளிகை நோக்கி சென்றார் விஜய். தனது கட்சி எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்த அவர் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

விஜய் ஆட்சி அமைப்பு

ஆனால் தற்போது வரை ஆளுநர் அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில் இரவோடு இரவாக விஜய்க்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. அவரது வீட்டு முன் இருந்த பேரிகாடுகள் அகற்றப்பட்டது என விஜய்க்கு எதிராகவே சில நிகழ்வுகள் நடந்து வருகிறது. இது தமிழக வெற்றி கழகத்தினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் 2017 சசிகலாவுக்கு நடந்ததும் 2026 இல் விஜய்க்கு நடப்பதாக சொல்கின்றனர் தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள்.

விகே சசிகலா

2017 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் அதிமுகவின் பொது செயலாளர் விகே சசிகலா நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தமிழக முதல்வராகவும் அவர் பதவி ஏற்க வேண்டும் என அதிமுகவினர் விரும்பினர். ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் செய்து தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்து பின்னர் கட்டாய ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். அப்போது தமிழகத்தின் ஆளுநராக வித்யாசாகர் ராவ் இருந்தார்.

2017 சம்பவம்

சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க இருப்பதாகவும் பதவி ஏற்பு விழா குறித்து ஏற்பாடுகளை அதிமுக செய்தது. ஆனால் பதவி ஏற்க அழைக்காமல் சசிகலாவை அலைக்கழித்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். எந்த ஒரு சட்டமன்ற கட்சியின் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை உடனடியாக நியமிக்குமாறு ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது. ஆளுநரும் அந்த கட்டாயத்துக்கு உட்பட முடியாது என்பதால் எவ்வளவோ முயன்றும் சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்கவே முடியவில்லை.

ஆளுநர்

அந்த சூழலில் சசிகலாவை முதலமைச்சர் பதவியில் இருந்து தானாகவே தகுதி நீக்கம் செய்யப்படும் வகையில் வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு விரைவில் வழங்கப்படக் கூடும் என்பதால் பதவியேற்பை ஆளுநர் தாமதப்படுத்துவதாக சட்ட நிபுணர்கள் கூறினர். சொன்னது போலவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்து அவர் சிறை சில நேரிட்டது. கடைசி வரை அவரால் முதல்வராகவே முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+