Shock crimes 2019: கள்ளக்காதலியின் 3 மகள்களை கொன்று.. சடலங்களுடன் உறவு.. 4 ஆயுள் தண்டனை!
சைக்கோ நபருக்கு 4 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
Recommended Video
சென்னை: எத்தனையோ கொலைகள் தமிழகத்தில் நடந்தாலும்... சில சைக்கோ கில்லர்களின் கொலைகள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.. அதில் சென்னை கொடூரம்.. கள்ளக்காதலியின் 3 மகள்களை கொன்று, அந்த சடலங்களுடன் உறவு வைத்த கொடூரனுக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கிய மகளா கோர்ட்டின் உத்தரவு மறக்க முடியாத ஒன்றாகும்!
காரைக்குடியை சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவரது கணவர் சின்னராஜ். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து உள்ளனர். 3 பெண் குழந்தைகள் உள்ளதால், அவர்களை காப்பாற்ற பழனியில் உள்ள பேக்கரியில் பாண்டியம்மாள் வேலை செய்து வந்தார்.
அப்போது உதயன் என்ற இளைஞருடன் கள்ள உறவு ஏற்பட்டது. இந்த உறவு தீவிரமானதால், பாண்டியம்மாள் தனது 3 பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, சென்னை ராயப்பேட்டையில் உதயனுடன் தனிக்குடித்தனம் நடத்த ஆரம்பித்தார். சென்னையில் ஒரு ஸ்வீட் கடைக்கு ஸ்வீட் சப்ளை செய்துவந்த உதயன் குடும்ப செலவுகளையும் கவனித்து வந்தான்.

உதயன்
ஆனால் நாளடைவில், பாண்டியம்மாளின் 3 பெண் குழந்தைகளுக்கும் உதயன் பாலியல் தொல்லை தர ஆரம்பித்துள்ளான். இதை பாண்டியம்மாளே நேரடியாக பார்த்து, உதயனை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதைதவிர 3 பெண்களில் ஒரு மகளை கட்டித்தரவேண்டும் என்று நேரடியாகவே கேட்டு விட்டான்.

ஆத்திரம்
மகள்களை நாசம் செய்வதை பொறுக்க முடியாத பாண்டியம்மாள், உதயன் உறவை துண்டித்தார். வீட்டுக்குள்ளும் சேர்க்கவில்லை. இதில் உதயனுக்கு பாண்டியம்மாள் மீது ஆத்திரம் வந்தது. அதனால் அவரையும், 3 பெண்களையும் கொலை செய்ய முடிவு செய்தான்.

போஸ்ட் மார்ட்டம்
அதன்படி கடந்த 2016ம் ஆண்டு, ஜுன் 25-ம் தேதி, திடீரென வீட்டுக்குள் நுழைந்த உதயன், உலக்கையால், பாண்டியம்மாள், 3 பெண்களையும் அடித்து கொலை செய்தான். பிறகு அந்த 3 பெண் குழந்தை சடலங்களுடனும் உறவு கொண்டுள்ளான். இந்த சம்பவம் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்தான் தெரியவந்தது. இது தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் உதயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

4 ஆயுள் தண்டனை
இந்த வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு கூறப்பட்டது. உதயன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 4 கொலை வழக்குகளில் 4 ஆயுள் தண்டனைகள் விதித்தும், அந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறி நீதிபதி மஞ்சுளா தீர்ப்பளித்தார்.
உதயனை தூக்கில் போடுங்க என்று பாண்டியம்மாளின் குடும்பத்தினர் அன்று கதறி துடித்த நிலையில், 4 ஆயுள் தரப்பட்ட தீர்ப்பானது இந்த வருடம் வழங்கிய மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications