Crime 2019: ஹனிமூன் கூட ஒழுங்கா முடியலை.. அடித்து உதைத்து.. ராதாவுக்கு நேர்ந்த துயரம்!
சென்னையில் இளம்பெண் ராதாவின் தற்கொலை அதிகமாக உலுக்கிவிட்டது
சென்னை: ரெண்டுங்கெட்டான் வயசில்.. பெற்றவர்களை விட்டுவிட்டு.. காதலனை நம்பி வீட்டை விட்டு ஓடிப்போய் வாழ்வை தொலைத்து.. மரணம் வரை சென்ற இளம்பெண்கள் ஏராளம்.. அந்த வகையில் இந்த வருடம் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியவர் ராதா! வீட்டை விட்டு ஓடிப்போய் காதலனை கரம் பிடித்தார் ராதா.. ஆனால், ஹனிமூன்கூட ஒழுங்கா முடியவில்லை.. ஒரு சில நாட்களிலேயே ராதாவை அடித்து.. உதைத்து.. சித்ரவதை செய்து.. கடைசியில் தூக்கு போட்டு தற்கொலை வரை கொண்டு வந்துவிட்டுவிட்டனர் துரோகிகள்!
சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்தவர் 62 வயது ராஜா... ஓய்வு பெற்ற சிஆர்பிஎப் மருத்துவ அலுவலர்.. இவரது மகள் ராதா. 23 வயதாகிறது.

படித்து முடித்துவிட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஒரு வருடமாக சாலிகிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்ற 27 வயது இளைஞரையும் காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் காதல் விவகாரம் வீட்டில் தெரிந்து இரு தரப்புமே எதிர்ப்பு சொல்லவும், கடந்த அக்டோபர் மாசம்
வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டனர். இதனால், சில நாட்கள் நண்பர்கள் வீட்டிலேயே புதுமண ஜோடி தங்கியது.
ஆனால், தாலி கட்டிய ஓரிரு நாட்களிலேயே பாலாஜியின் கோர முகம் வெளிப்பட்டது.. தினமும் தண்ணி.. அடி உதை, ரகளை.. என ஆரம்பித்தார்.இது எல்லாம் போதாதென்று தன்னை நம்பி வந்த பெண்ணின் நடத்தையிலும் சந்தேகப்பட ஆரம்பித்தார். கண்மூடித்தனமாக குடிவெறியில் அந்த பெண்ணை அடித்து நொறுக்கினார். இந்த சமயத்தில் மகனின் திருமணத்தை பாலாஜியின் தந்தை ஏற்று கொண்டார், மேலும் ராதாவின் பெற்றோரிடம் சென்று சமாதானம் பேசினார்.
அப்போது, முறைப்படி இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று சொல்லி, ராதாவை அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தார் பாலாஜியின் அப்பா! மகனையும் தன்னுடனேயே அழைத்து சென்றுவிட்டார். ஆனால், இதற்கு பிறகு பாலாஜி, ராதாவை பார்க்க வரவே இல்லை.. பேசுவதையும் தவிர்த்தார்.. அதனால் பாலாஜி வீட்டுக்கு ராதா கிளம்பி சென்றார்
அப்போதுதான், பாலாஜியின் அப்பாவின் சுயரூபமும் தெரிந்தது.. ராதாவை அடித்து உதைத்து அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.. இதனால் மனம் நொந்துபோய் வீட்டுக்கு வந்த ராதா, யாரும் இல்லாத நேரம் பார்த்து நவம்பர் 20-ம் தேதி தூக்கில் தொங்கிவிட்டார். தகவலறிந்து ஆவடி டேங்க பேக்டரி போலீசார், விசாரித்தனர்.. எனினும், காதல் என்ற பெயரில் வாழ்க்கையை அநியாயமாக முடித்து ராதாவின் மரணம் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது!












Click it and Unblock the Notifications