2020ல் இந்திய மக்கள் அதிகம் கேட்டது இது தான்.. மறக்கவே முடியாதது!
சென்னை: 2020ல் மக்கள் அதிகம் காதில் கேட்டது என்றால் பட்டென மனதில் தோன்றுவது என்றால் "இன்று முழு நாடும் கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 உடன் போராடுகிறது என்ற வரி தான்.
மார்ச் மாதம் தொடங்கிய இந்த காலர் டியூன், இந்த ஆண்டின் இறுதி வரை அனைவருக்கும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி லாக்டவுன் அறிவித்தது. அப்போது தொடங்கிய காலர் டியூன் தான். கீழ்கண்ட வரிகள் தான்..

"இன்று முழு நாடும் கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 உடன் போராடுகிறது. ஆனால், நினைவில் கொள்ளுங்கள்... நாம் நோயுடன் போராட வேண்டும். நோயாளிகளுடன் அல்ல. அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டாதீர்கள். அவர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று முடியும். இந்த வரிகளை நாம் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 20 முறையாவது கேட்டிருப்போம்.
ஆனால் உண்மையில் கொரோனா வந்தவர்களை பலர் ஒதுக்கிவைத்தார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் பெரிய அளவில் பரவி குறைந்த பின்னரே அந்த எண்ணத்தை கைவிட்டனர். இன்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தனிமையில் வாடி, கொடுமையை சந்திக்கிறார்கள். இதற்கு காரணம் நமக்கு தொற்று இருக்குமோ என்ற பயம் காரணம் என்றால் மற்றொரு காரணம் நம்மால் மற்றவர்களுக் கொரோனா வந்துவிடக்கூடாது என்பது தான்.
பொதுமக்களே கொரோனாவை வெல்ல முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மட்டுமே நிரந்திர தடுப்பூசி என்று அண்மையில் பேட்டி ஒன்றில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அதன்படி முககவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை தான் கொரோனா முற்றிலும் போக வழிவகுக்கும்.












Click it and Unblock the Notifications