மில்லினியம் டெக்னாலஜி விருது.. டிஎன்ஏ ஆராய்ச்சியில் புரட்சி.. நோபலுக்கு இணையான பரிசை வென்ற தமிழர்!
சென்னை: டிஎன்ஏ ஜீனோம் ஆராய்ச்சியில் புதிய முறையை அறிமுகப்படுத்தி, டிஎன்ஏ ஆராய்ச்சியை எளிமைப்படுத்தியதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஷங்கர் பாலசுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளேனர்மேன் இருவருக்கும் 2020ம் ஆண்டுக்கான மில்லினியம் டெக்னாலஜி பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஷங்கர் பாலசுப்ரமணியன் சென்னையை பூர்வீகமாக கொண்ட தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது..
Recommended Video
பினாத்தில் இருந்து டெக்னாலஜி அகாடமி பின்லாந்து என்ற அமைப்பு மூலம் கடந்த 2004ல் இருந்து 2 வருடங்களுக்கு ஒருமுறை மில்லினியம் டெக்னலாஜி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் டெக்னலாஜி துறையில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
நோபல் பரிசு பொதுவாக பழைய பாரம்பரிய ஆராய்ச்சிகளுக்கு மட்டும் வழங்கப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்ட நிலையில் 2004ல் இருந்து மில்லினியம் டெக்னலாஜி பரிசு பின்லாந்து மூலம் வழங்கப்படுகிறது. இது டெக்னாலஜி துறையில் நோபலுக்கு இணையானதாக பார்க்கப்படுகிறது.

எவ்வளவு
இந்த பரிசை வென்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஷங்கர் பாலசுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளேனர்மேன் இருவருக்கும் 1.22 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 வருட ஆராய்ச்சிக்கு பின் இவர்கள் இந்த பரிசை பெற்றுள்ளது. பொதுவாக மனிதர்கள் தொடங்கி பல உயிரினங்கள், வைரஸ்களில் டிஎன்ஏ ஆராய்ச்சியை மேற்கொள்ள பழைய பாரம்பரிய முறைதான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

மாற்றம்
இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து Solexa என்ற நிறுவனத்தை உருவாக்கி, புதிய டிஎன்ஏ - ஜீனோம் ஆராய்ச்சி முறையை கொண்டு வந்தனர். Next Generation DNA Sequencing (NGS - என்ஜிஎஸ்) என்று அழைக்கப்படும் டிஎன்ஏ ஆராய்ச்சி முறையை கொண்டு வந்தனர். என்ஜிஎஸ் என்பது ஒரு டிஎன்ஏவை வேகமாக சோதனை செய்து, அதன் வடிவமைப்பு மற்றும் பண்புகளை கண்டுபிடிப்பது ஆகும். என்ஜிஎஸ் முறை மூலம் மிக வேகமாக, துல்லியமாக, குறைந்த செலவில் டிஎன்ஏ வடிவமைப்பை கண்டுபிடிக்க முடியும்.

என்ஜிஎஸ்
பொதுவாக புதிய வைரஸ் ஒன்று தோன்றுகிறது என்றால், அதன் டிஎன்ஏ மற்றும் ஜீனோமை சோதனை செய்து வகைப்படுத்த பல மாதங்கள் ஆகும். ஆனால் இவர்கள் உருவாக்கிய என்ஜிஎஸ் முறை டிஎன்ஏ ஆராய்ச்சி மூலம் மிக வேகமாக, துல்லியமாக வெறும் 1000 டாலர் செலவில் டிஎன்ஏ ஆராய்ச்சியை செய்ய முடியும். இதற்கு முன் இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளை செய்ய பல மில்லியன் டாலர் செலவு ஆகும்.

வேகம்
இவர்கள் இந்த புதிய வகை டிஎன்ஏ ஆராய்ச்சியை உருவாக்கியதோடு, அதை உலகம் முழுக்க வேகமாக கொண்டு சென்றனர். முக்கியமாக கொரோனாவின் ஜீனோம் ஆராய்ச்சியில் இவர்கள் உருவாக்கிய என்ஜிஎஸ் முறை பெரிதும் உதவியது. இதுதான் கொரோனா வேக்சின்கள் வேகமாக உருவாக முக்கிய காரணமாக இருந்தது. கடந்த வருடம் அளிக்கப்பட வேண்டிய விருது கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த வருடம் அளிக்கப்பட்டுள்ளது.

எப்படி செய்தனர்
இவர்களின் புதிய என்ஜிஎஸ் வகை டிஎன்ஏ ஆராய்ச்சி மூலம் ஒரே நாளில் ஜீனோம்களை ஆராய்ச்சி செய்து வகைப்படுத்த முடியும். ஒரு டிஎன்ஏவில் உள்ள பல மில்லியன் பகுதிகளை ஒரே நேரத்தில் இதன் மூலம் ஆற்ற முடியும். டிஎன்ஏவை சிறு சிறு பகுதிகளாக பிரித்து, ஒரே நேரத்தில் அந்த பல மில்லியன் பகுதிகளை எளிதாக சோதனை செய்து, ஜீனோக்களை வகைப்படுத்தி, கணினி மூலம் டிஎன்எவை எளிதாக வகைப்படுத்தும் முறையைதான் ஷங்கர் பாலசுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளேனர்மேன் இருவரும் உருவாக்கி உள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications