2021 Vs 2026... காலம் மாறிபோச்சு... எய்ம்ஸ் பற்றி பேசாத திமுக..! ‘நீட்’ பற்றி பேசும் அதிமுக!
சென்னை: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் பிரச்சாரம் எதை மையமாக வைத்துக் கட்டமைக்கப்பட்டிருந்ததோ அதற்கு மாறாக இந்தத் தேர்தல் களம் உள்ளது. திமுக கைவிட்ட நீட் விவகாரத்தை அதிமுக இந்த முறை முக்கிய ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளது.
கடந்த 2021 தேர்தல் பரப்புரையில் உதயநிதி ஸ்டாலினின் மதுரை சுற்றியுள்ள தொகுதிகளில் எங்கு வாக்கு சேகரிக்கச் சென்றாலும் கையில் இரு செங்கல்லுடன் சென்றார். 'பாஜக மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவதாக வாக்குறுதி அளித்து ஆண்டுக்கணக்காகிவிட்டது. ஆனாலும், ஒரு பணியும் நடக்கவே இல்லை. ஒரு செங்கல் கூட வைக்கவில்லை' என்று வாக்காளர்களைக் கவரும்படி பிரச்சாரம் செய்தார்.

மேலும், அவர் பேசும்போது செங்கல்லைக் காட்டி, "இதுதான் அதிமுக அரசு கொண்டுவந்த எய்ம்ஸ் மருத்துவமனை. இதற்கு ஒரு செலவுக் கணக்கை எழுதியுள்ளனர். அந்த செலவு எவ்வளவு தெரியுமா? 75 கோடி" என்றார். இந்த உத்தியால்தான் திமுகவின் வெற்றியே உறுதியானது எனப் பின்னர் உடன்பிறப்புகள் ஒரு கருத்தைத் தெரிவித்தனர்.
இந்தச் செங்கல்லை மறுபடியும் கையில் எடுத்து அனல் பறக்கப் பிரச்சாரத்தின் மூலம் அண்ணாமலை பதிலடி கொடுத்தார். 'உதயநிதிக்குச் செங்கல் பார்சல்' சென்று அனுப்பப் போவதாக அவர் கடந்த 2023இல் பேசினார். தர்மபுரியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று 2009இல் திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், 14 ஆண்டுகளாகியும் ஒரு செங்கல்கூட வைக்கப்படவில்லை என்றார் அண்ணாமலை.
மேலும் இந்த உரையின் போது அண்ணாமலை 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அரசின் அனுமதியோடு 1 லட்சம் செங்கற்கள் வழங்கப்பட்டு, 11 மருத்துவமனைக் கல்லூரிகள் கட்டியுள்ளோம் என்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரி நடைபெற்ற இறுதிக்கட்ட பரப்புரையின் போது "எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் செங்கல் நட்டது தவிர வேறு எதுவும் செய்யவில்லை" என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
தமிழகம் தாண்டி இந்தச் செங்கல் பிரச்சினை தேர்தல் களத்தில் எதிரொலித்தது. ஆட்சிக்கு வந்த பின்னர் 'நீட் விலக்கு நம் இலக்கு' என ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தது திமுக. அதில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், முன் செங்கல் கொண்டுவந்ததைப் போன்று முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எத்தனை சதவீதம் மதிப்பெண் எடுக்கவேண்டும் என்று தெரியுமா? என்றவர் மேடையில் ஒரு கோழி முட்டையை எடுத்துக் காட்டினார். ஆனால், அது எடுபடவில்லை.
முன்னதாக நீட் தேர்வுக்கு எதிராகப் பொதுமக்கள் 50 லட்சம் பேரிடம் கையெழுத்துகளை வாங்கியது திமுக. அதை மாநாட்டில் குப்பையில் கொட்டப்பட்டுக் கிடந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் பாஸ்கர் குற்றஞ்சாட்டினார். அதற்காக ஆதாரங்களை அவர் மேடையில் வெளியிட்டார்.
அதே மாதிரி ஈரோடு கிழக்கு தொகுதியில் 2023இல் இடைத்தேர்தல் நடைபெற்ற போதும் அங்குக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நின்ற இளங்கோவனுக்குப் பிரச்சாரம் செய்தபோது உதயநிதி மீண்டும் அதே எய்ம்ஸ் செங்கல் சூத்திரத்தைப் பயன்படுத்தி வாக்குக் கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அண்ணாமலை ஒரு செங்கல்லைக் காட்டி மருத்துவமனைக் கட்டினோம் எனப் பெருமிதமாகப் பேசினார்.
திமுக வெற்றி பெற்றுவந்த பிறகு உதயநிதியின் பிரச்சாரத்தைச் சட்ட மன்றத்திலேயே பாராட்டிப் பேசினார் ஏ.வ.வேலு. அவர், "தேர்தலுக்கான பிரச்சார காலம் மிகக் குறைவாக இருந்தது. ஸ்டாலினால் 234 தொகுதிகளுக்கும் செல்ல முடியாத சூழல் இருந்தது. அவரால் எங்கெல்லாம் செல்ல முடியவில்லையோ, அங்கெல்லாம் உதயநிதி சென்றார். திமுகவில் பலர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற உதயநிதியே காரணம்" என்றார்.
ஆனால், இந்த முறை திமுக எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தைப் பிரச்சார களத்தில் முன்வைக்கவே இல்லை. மாறாக எடப்பாடி பழனிசாமியின் சர்ச்சைக்குரிய புகைப்படத்தைக் காட்டி அவர் எப்படி பதவி பெற்றார் என்பதை விமர்சிக்கும் விதமாகப் பேசிவருகிறார். அந்தப் பேச்சு இப்போது எடப்பாடி பழனிசாமிக்கும் உதயநிதிக்குமான தனிமனித தாக்குதலாக மாறியுள்ளது. வரம்பு மீறி பொது மேடைகளில் ஒருவரை ஒருவர் தாக்கி வருவதாகப் பலரும் கவலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த முறை திமுக நீட் தேர்வையும் எய்ம்ஸ் மருத்துவமனை பிரச்சினையையும் தொடவில்லை. அதற்கு மாறாகப் போகும் இடங்களில் எல்லாம் நீட் தேர்வு முறையை ரத்து செய்யும் ரகசியம் உள்ளதாகச் சொன்ன உதயநிதி, அவரது ஆட்சிக்காலத்தில் ஏன் அந்தத் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்.
'நீட்' தேர்வு விவகாரத்தில் திமுக நிலைப்பாட்டையே ஆதரித்த தவெக விஜய்யும் எந்தக் கூட்டத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக வாய் திறக்காமல் உள்ளார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நீட் கோட்சிங் சென்டருக்கு 20 கோடி கடன் கொடுத்துள்ளதாகக் கூறி, அவர் புதிய சர்ச்சைக்குள் வேறு சிக்கிக் கொண்டுள்ளார். எனவே அதிமுக மட்டுமே நீட் தேர்வு ரத்து குறித்து நியாயம் கேட்டுவருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு ரத்து குறித்து உதயநிதி அளித்த வாக்குறுதியை டார்கெட் செய்து தாக்கி பேசிவருகிறார்.
- கடற்கரய்
-
திருமா பெயரை சொன்ன போது.. அப்படியே அமர்ந்திருந்த பிரேமலதா? உண்மையில் என்ன கோபம்? கசிந்த தகவல் -
விஜய் தரப்பில் இருந்து திட்டமிட்டு 'ஜனநாயகன்' காட்சிகள் லீக் செய்யப்பட்டதா? ஆதவ் அர்ஜுனா ஆவேசம்! -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
“எனக்கும் சிற்றரசுவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு”.. அண்ணா நகரில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின்! -
பைசா செலவில்லை.. வெறும் ஏஐ வீடியோக்கள் - சொகுசாகப் பரப்புரை செய்யும் காங்கிரஸ் -
'இல்லத்தரசி' கூப்பன்.. ரெடியாகும் QR கோடு அஸ்திரம்.. ஸ்டாலின் கையில் எடுக்கும்.. பிரம்மாண்ட பிளான்! -
புதுமைப் பெண் திட்டம்! ரூ.1000 லிருந்து ரூ.1500 உயர்த்த திமுக வாக்குறுதி! இப்படி ஒரு சூப்பர் காரணம்? -
தேசிய அரசியலில் ஸ்டாலின் 'ரைசிங்'.. கோவப்பட்ட மம்தா? ராகுலின் மௌன யுத்தம்.. பின்னணி என்ன? -
திமுகவில் எந்த சமூகத்தவருக்கு அதிக சீட்? வன்னியர், கவுண்டர்களுக்கு முன்னுரிமை? இதோ முழு லிஸ்ட்! -
“ராகுல் காந்தி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஜெயிக்கணும்னே நினைக்கலயா?”.. சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை -
தோல்வி பயம்.. அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் அதுதான்.. விளாசிய கனிமொழி! -
திமுக கூட்டணிக்கு முக்கிய இயக்கம் ஆதரவு.. தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகளை அள்ளலாம்! யாருனு பாருங்க












Click it and Unblock the Notifications