மோடி பிளானே வேற! ஏமாறாதீங்க! நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்! மாதம் இதுதான் - டிஆர் பாலு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் பிரதமர் மோடி வேறு பிளானில் இருப்பதாகவும், இதனால் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டி இந்த ஆண்டிலேயே நடைபெறும் என ஒரு மாதத்தின் பெயரை கூறி திமுக பொருளாளரும் எம்பியுமான டிஆர் பாலு பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த 2019ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் 2வது முறையாக ஆட்சியை பிடித்தது. மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார்.

2024 Parliament election may be held on this 2023 December, says DMK MP TR Balu

இந்நிலையில் தான் 5 ஆண்டு ஆட்சிக்காலம் அடுத்தாண்டு முடிகிறது. இதனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதனால் பாஜக, காங்கிரஸ், திமுக உள்பட பல கட்சிகள் இப்போது இருந்தே நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை துவங்கி விட்டன.

குறிப்பாக நடைபெற உள்ள தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டவர்கள் மாநில வாரியாக பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் பேசி வருகின்றனர். மாறாக எதிர்க்கட்சிகள் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் ஒன்றிணையும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த மாதம் 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் 17 கட்சிகளின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உள்பட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்துவது குறித்து ஆலோசித்தனர். இந்த கூட்டம் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக வரும் 13, 14 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் தான் சென்னை கொரட்டூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திமுகவின் பொருளாளரும், எம்பியுமான டிஆர் பாலு பேசினார். அப்போது நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறி, முன்கூட்டி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புள்ள மாதத்தையும் கூறி பரபரப்பை பற்ற வைத்துள்ளார். இதுதொடர்பாக டிஆர் பாலு கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதம் வரும் என நினைக்காதீர்கள். எதற்காக சொல்கிறேன் என்றால் நீங்கள் எல்லாம் ஏமாந்துவீடாதீர்கள். தேர்தலை முன்கூட்டியே கொண்டு வர அவசரஅவசரமாக பிரதமர் மோடி செயல்படுகிறார். அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் உடனே ஏன் போபாலுக்கு(மத்திய பிரதேச தலைநகர் போபாலில் பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் மோடி பேசினார்) அவசரஅவசரமாக சென்றார்.

இதில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். 2024ம் ஆண்டுக்கு நடைபெற வேண்டிய தேர்தலை அட்வான்ஸ் பண்ணுவார்கள். அநேகமாக டிசம்பரில் கூட தேர்தல் வரலாம். ஆகவே இன்று தேர்தல் களத்தில் இருக்கிறோம் என நினைத்து கொண்டு அனைவரும் பணிகளை செய்ய வேண்டும்'' என கூறி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+