2024 நாடாளுமன்றத் தேர்தல்! திமுகவில் அந்த 2 பேருக்கு மீண்டும் சீட் இல்லை! பரபரக்கும் எம்பி சீட் ரேஸ்
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சிட்டிங் எம்.பி.க்களில் சிலருக்கு திமுக தலைமை கல்தா கொடுத்துவிடும் திட்டத்தில் இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் சரிவர செயல்படாதவர்கள் யார், தொகுதிப்பணிகளில் ஆர்வம் காட்டாதவர்கள் யார், சர்ச்சைகளில் சிக்கி கட்சிக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் யார் என்ற லிஸ்டெல்லாம் ரெடியாகி வருகிறதாம்.
அதில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கும், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்துக்கும் மீண்டும் சீட் கிடையாது என்பது மட்டும் இப்போதைக்கு உறுதி செய்யப்பட்ட தகவலாகும். இதேபோல் இந்த லிஸ்டில் குறைந்தது இன்னும் 3 பேர் இணைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொகுதிப்பணிகள் குறித்த அறிக்கையை முதல்வரிடத்தில் சமர்பிக்காத எம்.பி.க்களுக்கும் சிக்கல் இருக்கும் எனத் தெரிகிறது. இதனிடையே கடலூர் மக்களவைத் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவனும், நெல்லை மக்களவைத் தொகுதியில் கிரகாம்பெல்லும் திமுக சார்பில் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதற்கான சீட் ரேஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே ராமநாதபுரம் தொகுதியை குறிவைத்து திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட்டணிக் கட்சியான முஸ்லீம் லீக் வசம் அந்த தொகுதி உள்ளதால் மீண்டும் ராமநாதபுரம் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கே ஒதுக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வேளை இந்த முறை திமுக நேரடியாக களமிறங்கினால் ராஜீவ்காந்தி வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேனி மக்களவைத் தொகுதியில் இந்த முறை திமுக நேரடியாக களமிறங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications