Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2026 அவ்வளவு ஈசியில்லை ஸ்டாலினுக்கு! விஜய்+SIR+பாஜக+அதிமுக! திமுகவுக்கு நெருக்கடி தரும் 5 விஷயங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராகி வருகிறது. அதே நேரத்தில் கடந்த தேர்தலைப் போலல்லாமல் இந்த முறை திமுகவுக்கு கடும் சவால்கள் காத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். சிறுபான்மை ஓட்டுகளை பிரிக்கும் விஜய், தேர்தல் ஆணையத்தின் 'SIR' நடவடிக்கையால் நீக்கப்படும் வாக்குகள், மத்திய ஆளும் பாஜகவின் நெருக்கடி, அதிமுகவின் வலுவான கட்டமைப்பு என இந்த தேர்தலில் திமுகவுக்கு கடும் சவால்கள் காத்திருக்கிறது என்கின்றனர். மேலும் வழக்கமாகவே ஆளும் கட்சி மீது இருக்கும் எதிர்ப்பு அலையும் இந்த தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்கை வகிக்கும் எனவும் சொல்கின்றனர்.

திமுக தலைவராக தனது இரண்டாவது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். கலைஞர் கருணாநிதியின் மரணத்திற்கு பிறகு 2021ல் தான் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே வெற்றிவாகை சூடினார்.

mk stalin dmk vijay

அதற்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் திமுகவுக்கு வெற்றி முகம் தான். அதே நேரத்தில் கூட்டணி பலத்தால் தான் திமுக ஜெயிக்கிறது என்ற குற்றச்சாட்டை அதிமுக வைத்து வருகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் இருந்து தற்போது வரை திமுக கூட்டணி மிக வலுவாக இருக்கிறது.

2026 தேர்தல்

அதே கூட்டணி தற்போது தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் தொடர்ந்து இருக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூடுதலாக சில இடங்களை கேட்டுப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த தேர்தல் மு.க.ஸ்டாலினுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது எனவும், கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தல் அவருக்கு சற்று கடினமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இது தொடர்பாக அவர்கள் ஐந்து காரணிகளையும் முன்வைக்கின்றனர். அதில் முதல் காரணி விஜய் தான்.

மு.க.ஸ்டாலின்

திமுக இதுவரை அடுத்தடுத்து இரு தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததில்லை அந்த மோசமான சாதனையை தகர்க்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். ஆனால் இந்த தேர்தலில் விஜய் முதன்முதலாக களமிறங்க இருப்பது ஆளுங்கட்சியான திமுகவுக்கு சற்று நெருக்கடியை அதிகரிக்கும் என்கின்றனர். தேர்தல் நேரத்தில் இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மை வாக்குகள் குறிப்பிட்ட அளவு விஜய்க்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக கிறிஸ்தவ இஸ்லாமிய வாக்குகள் குறிப்பிட்ட அளவு விஜய்க்கு செல்லலாம் என சொல்லப்படுகிறது.

விஜய்- தமிழக வெற்றிக் கழகம்

இதுவரை வெளிவந்த பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் விஜய்க்கு 20% ஆதரவு இருப்பதாக சொல்லப்பட்டாலும் அதில் ஐந்து முதல் பத்து சதவீதம் சிறுபான்மை வாக்குகளாக இருக்கலாம். திமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் பிரிப்பது எப்படி திமுகவுக்கு சாதகமாக இருக்குமோ, அதே போல சிறுபான்மை வாக்குகளை விஜய் பிரிப்பது திமுகவுக்கு பாதகமாக இருக்கும் என்கின்றனர். சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவு இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளும் விஜய்க்கு செல்லும் என்பதால் திமுகவின் வாக்கு வங்கி பலத்த அடியை சந்திக்கலாம் என்கின்றனர்.

வாக்காளர் பட்டியல்

இப்போதைக்கு இந்தியா முழுவதும் பேசுபொருளாக இருப்பது 'SIR' எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் தான். 2026 தேர்தலை முன்னிட்டு தமிழகத்திலும் அந்த பணி தொடங்கி இருக்கும் நிலையில் திமுக மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்ற பெயரில் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி திமுக எதிர்த்து வருகிறது. அதே நேரத்தில் போலி வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக எழுப்பி வருகிறது.

தேர்தல் ஆணையம்

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 10,000 முதல் 15,000 வரை போலி வாக்காளர்கள் இருப்பதாக அதிமுகவினர் பரபரப்பு புகார் கூறி இருந்தனர். அந்தப் பகுதிகளில் எல்லாம் திமுக வென்ற போது கோவையை தவிர்த்து சில தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 5 ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை தான் இருந்தது. இந்த நிலையில் 'SIR' மூலம் சில ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டால் அது திமுகவுக்கு பின்னடைவாகவே கருதப்படும் என்கின்றனர்

பாஜக அதிமுக கூட்டணி

கடந்த தேர்தல்களை விட இந்தத் தேர்தல் திமுகவுக்கு சவாலாக இருப்பதற்கு மற்றும் ஒரு காரணம் அதிமுக பாஜக கூட்டணி தான். மத்தியில் ஆளும் கட்சியான பாஜக ஏற்கனவே மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் திமுகவை மிரட்டுவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் நேரத்தில் மூத்த அமைச்சர்களை குறி வைத்து அதிரடி ரைடுகள் நடத்தப்படலாம் என குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றனர். சமீபத்தில் கூட மூத்த அமைச்சரான கேஎன் நேரு மீது குற்றம் இருப்பதாக கூறி அதிர வைத்தது அமலாக்க துறையில் கடிதம். அது மட்டுமில்லாமல் தேர்தல் நேரத்தில் இதுபோல மேலும் சில குற்றச்சாட்டுகளும் அதிரடு ரைடு நடவடிக்கைகளும் இருக்கலாம் என்கின்றனர். அதோடு அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தி வைத்திருக்கும் அதிமுகவும் பாஜகவும் சேர்ந்திருப்பது, விஜய் தனித்து போட்டியிடுவது திமுக ஆதரவு வாக்குகளை சிதறடிக்கும் என்பதால் வெற்றி கொஞ்சம் எட்டாக்கனி தான்.

ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பு

எல்லாவற்றையும் விட திமுகவுக்கு நெருக்கடி தரக்கூடிய ஒரு விஷயம் ஆளுங்கட்சி மீதான எதிர்ப்பு அலை. ஏற்கனவே குறிப்பிட்டது போல தமிழகத்தை திமுக அடுத்தடுத்து இரு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆண்டதில்லை என்பதுதான். அதிமுக கூட இரு முறை தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறது. பொதுவாகவே ஆளும் கட்சி எதிர்ப்பு அலை எந்த கட்சியாக இருந்தாலும் குறிப்பிட்ட சதவீதம் இருக்கும்.

திமுக சவால்கள்

குறிப்பாக இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் பெண்கள் உள்ளிட்டோர் மாற்றத்தை தேடுவார்கள். மேலும் கூட்டணிகள் மாறும்போது இயல்பாகவே ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் எதிர் முகாமை சென்று சேரும். அந்த வகையில் தற்போது விஜய், அதிமுக பாஜக, சீமான் என மூன்று எதிரிகள் திமுகவை களத்தில் சந்திக்கிறார்கள். இதனால் ஆளுங்கட்சி எதிர்ப்பு வாக்குகள் பிரிந்தாலும் திமுகவுக்கு அது பின்னடைவு ஏற்படுத்தும். இவற்றையெல்லாம் சமாளித்தால் முதன் முறையாக தமிழகத்தில் இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+