விருதுநகரில் காங்கிரஸின் செல்வாக்கு என்னவானது?அடியோடு மாறுகிறதா தேர்தல் ரிசல்ட்! சத்தியம் டிவி சர்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சத்தியம் டிவி கருத்துக் கணிப்பு ஒன்றை எடுத்துள்ளது. அதில் விருதுநகரில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் எந்தக் கட்சி வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காமராஜர் குறித்து திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா அவதூறாகப் பேசியதன் எதிரொலி நன்றாகவே பிரதிபலிப்பது கண்கூடாகத் தெரிகிறது.

தமிழகத்தில் இன்னும் 8 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுகவே ஆட்சியைத் தொடர வேண்டும் என்று முனைப்புக் காட்டி வருகிறது. இதன் மூலம், ஸ்டாலின் தலைமையிலான திமுக தொடர்ந்து ஆட்சி அமைக்கும் பெருமையைப் பெறும்.

tamil nadu assembly election 2026 virudhunagar 2026

ஜெயலலிதா இல்லாத நிலை

இதேவேளையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத சூழலில் அதிமுக வென்று ஆட்சி அமைப்பதுதான் அவர்களது உண்மையான செல்வாக்கை வெளிப்படுத்தும். எடப்பாடி பழனிசாமி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையும் புலப்படும். சுருக்கமாகச் சொல்லப் போனால், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் பிறகு, ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதை அவர் நிரூபித்துவிட்டார். அதுபோல், ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகவின் நிலை என்ன என்பதை அறிய இந்தத் தேர்தல் அவசியமானது.

அதிமுகவுக்கு பாதகமா

இந்த நிலையில், அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கிறது. அதுபோல், திமுகவும் ஏற்கெனவே இருக்கும் கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தலைச் சந்திக்கிறது. பாமக, தேமுதிக எந்தக் கூட்டணிக்குச் செல்லும் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

வெல்லப் போவது யார்

இந்த நிலையில், வரும் தேர்தலில் யார் வெல்லப் போகிறார்கள் என்பது குறித்து சத்தியம் டிவி கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. அதில் மக்களிடம் மிகச் சிறந்த ஆளுமை யார், சிறந்த எதிர்க்கட்சி எது, ஆளும் அரசில் எந்தத் திட்டம் உங்களுக்குப் பிடிக்கும் போன்ற கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டுள்ளன.

7 தொகுதிகளில் நிலவரம்

அந்த வகையில், விருதுநகரில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் எந்தக் கட்சிக்கு ஆதரவு என்பது குறித்துப் பார்ப்போம். அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, விருதுநகர் ஆகிய 7 தொகுதிகளில், இரண்டு தொகுதிகளில் திமுக கூட்டணியும், ஒரு தொகுதியில் அதிமுக கூட்டணியும் வெல்ல வாய்ப்பிருக்கிறதாம். ஏனைய 4 தொகுதிகளில் இரு கட்சிகளிடையே இழுபறி நிலவுகிறது எனக் கணிக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுகவும், திருச்சுழி, சாத்தூரில் திமுகவும் வெல்ல வாய்ப்பிருக்கிறதாம்.

விருதுநகர் 2021

இதில் குறிப்பாக, விருதுநகர் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு, 2021 ஆம் ஆண்டு ஆகிய தேர்தல்களில் திமுக கூட்டணியே வென்றிருக்கிறது. எனினும், இந்த முறை இழுபறி நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் அவதூறு பேச்சுகள் என்று தெரியவருகிறது. எளிமையின் சிகரம் காமராஜரின் பிறந்தநாள் விழாவில் திருச்சி சிவா பேசியபோது, "ஏசி இல்லாமல் காமராஜரால் தூங்க முடியாது" எனக் கருணாநிதி தன்னிடம் சொன்னதாகத் தெரிவித்ததுதான் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், திருச்சி சிவாவை தனிப்பட்ட முறையிலும் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்திருந்தனர்.

காங்கிரஸ் கொந்தளிப்பு

இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டதன் அடிப்படையில், காங்கிரஸில் கொந்தளிப்பு தணிந்துள்ளது எனச் சொல்லலாம். விருதுநகரில் பொதுவாக திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்தான் போட்டியிடும். அவர்கள்தான் காமராஜர் குறித்த பேச்சுக்குக் கடும் எதிர்ப்பைக் காட்டினரே, பிறகு இந்த முடிவுகள் எப்படி எனக் நீங்கள் கேட்கலாம். இது குறித்து திமுகவினர் சிலரிடம் கேட்டபோது, "காமராஜரை அவமானப்படுத்தியும் அதே கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதால் மக்களுக்குக் கோபம் இருக்கலாம். ஆனால், முதல்வர் தலையிட்டதால் இந்த பிரச்சினை சுமூகமாகிவிட்டது. இல்லாவிட்டால், இழுபறிதானே? திமுக கூட்டணி வெல்ல வாய்ப்பிருக்கிறது. கடந்த இரு தேர்தல்களிலும் திமுக கூட்டணிதானே வென்றுள்ளது" என திமுக நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+