தமிழகத்தில் 15-வது நாளாக குறைந்த கொரோனா.. 21,410 பேருக்கு பாதிப்பு.. கோவை தொடர்ந்து டாப்!
சென்னை: தமிழகத்தில் இன்று 21,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 443 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 15-வது நாளாக குறைந்துள்ளது. தினசரி பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

முழு ஊரடங்கால் வந்த பலன்
கொரோனாவை தடுக்க தமிழகத்தில் தொடந்து 2 வாரங்கள் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு போடப்பட்டதால் தொற்று தினமும் குறைந்து வருகிறது. ஒரு கட்டத்தில் 36,000-க்கு மேல் சென்ற தினசரி பாதிப்பு தற்போது 22,000-க்கு கீழே சென்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிழப்பும் குறைகிறது
இதனால் மொத்த பாதிப்பு 2,78,64,752 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 443 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 62 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 26,571 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 32,472 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 19,32,778 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

கோவை முதலிடம்
2,57,463 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,64,541 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,78,64, 752 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 1,789 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு 2,000-க்கும் கீழே குறைந்து விட்டது. ஆனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது. சென்னையை விட கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

சேலத்திலும் அதிகம்
கோவையில் மட்டும் 2663 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 862 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 372 பேருக்கும், மதுரையில் 468 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 633 பேருக்கும், திருவள்ளூரில் 525 பேருக்கும், திருச்சியில் 651 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 1104 பேருக்கும், விருதுநகரில் 472 பேருக்கும், ஈரோட்டில் 1569 பேருக்கும், சேலத்தில் 1171 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications