ரொட்டிக்கு கையேந்தும் இலங்கை மக்கள்! அரவணைக்கும் தமிழகம்! நெருக்கடியால் அகதிகளாக வந்த 21 பேர்..!
சென்னை : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனைக்கு வந்த 21 பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலையானது நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இலங்கை அரசிற்கு எதிராக மக்கள் கடும் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அங்கு நாளுக்கு நாள் நிலைமை மிக மோசமாகி வருகிறது. ஊரடங்கு, ராணுவம் குவிப்பு போன்ற நடவடிக்கைகள் பலன் கொடுக்காத நிலையில் மக்கள் போராடி வருகின்றனர்.

இலங்கை நெருக்கடி
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் கியாஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது எரிபொருளுக்காக நாட்டின் மக்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இலங்கை நாட்டின் தலைநகரான கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதலே கேஸ் சிலிண்டர்கள் வாங்க மக்கள் காத்திருக்கின்றனர் .

வாழவே சிரமம்
ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே சிலிண்டர் கிடைப்பதாகவும் சமையல் எரிவாயுவுக்கும் கடும் தட்டுப்பாடு உருவாகியுள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக ரொட்டி, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். தங்கள் அத்யாவசிய தேவைக்காக தங்கம் உள்ளிட்ட தாங்கள் சேர்த்து வைத்துள்ள பொருட்களை விற்றாலும், தேவையான பொருட்களை வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.

தமிழகம் வரும் மக்கள்
எந்தவிதமான அத்தியாவசியப் பொருள்களும் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருவதால் அகதிகளாக தமிழகம் வரும் இலங்கை மக்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இலங்கையில் இருந்து படகுகளில் வந்து சேரும் தமிழர்களை படகோட்டிகள் தனுஷ்கோடி அருகே உள்ள கடற்பகுதியில் காணப்படும் மணல்திட்டில் இறக்கிவிட்டு மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் சென்றுவிடுகின்றனர். இந்நிலையில் இலங்கையில் இருந்து சில குடும்பங்கள் தமிழகம் வந்து சேர்வதாகக் கூறப்படுகிறது.

21 பேர் அகதிகளாக வந்தனர்
இந்நிலையில், இலங்கையிலிருந்து மேலும் 21 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். தனுஷ்கோடிக்கு அருகே அரிச்சல்முனைக்கு வந்த 21 பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர்கள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாட்டில் இருந்து ஏற்கனவே 20 நபர்கள் தமிழகம் வந்த நிலையில், தற்போது மேலும் 21 பேர் வந்துள்ளதால் இதுவரை தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
2022 நிலைமைக்கு போகும் இலங்கை! எல்லாத்துக்கும் இந்த டிரம்ப்தான் காரணம்! மோசமாகும் நிலைமை! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications