பொங்கிய பொன்னி நதி! 17 ஆண்டுகளில் இல்லாத காவிரி வெள்ளம்! மேட்டூரில் 2.10 லட்சம் கனஅடி நீர் திறப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒகேனக்கலில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல் மேட்டூரில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தீவிர கனமழை பெய்தது.

நேற்றும், நேற்று முதல் நாளும் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவிற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த 3 மாநிலங்களுக்கும் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளம்

வெள்ளம்

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் அங்கிருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நேற்று ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2.45 லட்சம் கனஅடியாக இருந்தது. இரவு நேரத்தில் வெள்ளத்தை தவிர்க்கும் விதமாக இந்த நீர் வெளியேற்றும் அளவு 2 லட்சம் கனஅடியாக குறைந்தது. ஒகேனக்கலில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வெள்ளம்

வெள்ளம்

ஒகேனக்கலில் நிலவும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. கர்நாடகாவில் பெய்யும் தொடர் மழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. அதேபோல் மேட்டூரில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. 17 ஆண்டுகளுக்கு பின் மேட்டூரில் 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

தண்ணீர் புகுந்தது

தண்ணீர் புகுந்தது

பள்ளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சாலைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பவானி ஆற்றிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதை சுற்றியுள்ள கரையோரம் உள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். காவிரி கரையோர கிராமங்களுக்கு தற்போது தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்து உள்ளது. திருச்சிக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து உள்ளனர். இரவு நேரத்தில் நீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் முன்பே எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இன்று

இன்று

இதனால் நேற்று இரவு தண்ணீர் வெளியேற்றும் அளவு அதிகரிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று மேட்டூரில் 2.40 லட்சம் கன அடி நீர் வரை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.அணை நீர்மட்டம் முழு கொள்ளவான 120.07 அடியை எட்டியுள்ளது. நீர் இருப்பு - 93,582 டிஎம்சி, நீர்வரத்து - 2,00,000 கன அடி, நீர் வெளியேற்றம் - 2,10,000 கன அடியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+