தமிழகம்: பல மாவட்டங்களில் பின்னி பெடலெடுத்த பெருமழை- இன்றும் வெளுத்து எடுக்கப் போகிறதாம்!
சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்றும் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல்நிலவுகிற வளிமண்ட கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாடு, புதுவையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று திடீரென கனமழை கொட்டியது. திருப்பூர் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை வெளுத்து கட்டியது. தேனி, பெரியகுளம், கம்பம் பகுதிகளில் பெருமழை பெய்தது. காவிரி டெல்டாவில் தஞ்சாவூர் பாபநாசம் பகுதிகளில் 1 மணிநேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டியது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இரவு நேரங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடையே தமிழக மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்கிறது வானிலை ஆய்வு மையம். தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை மிக அதிகளவில் பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சபரிமலை காடுகளில் கனமழை பெய்வதால் பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. பம்பையில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications