அட்ரஸே இல்லை.. ரிட்டர்ன் ஆன நோட்டீஸ்.. 22 கட்சிகள் செயல்படாத கட்சிகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
சென்னை : தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 22 அரசியல் கட்சிகளை செயல்படாத கட்சிகள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 233 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில், தேர்தலில் போட்டியிடாத கட்சிகள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
30 நாட்களுக்குள் அந்த கட்சிகள் விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் ஆணையம் அளித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், 22 கட்சிகள் செயல்படாத கட்சிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி பதிவு செய்யும் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டும் என்றால் மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்தோ, கூட்டணியாகவோ குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.

6 ஆண்டுகள் போட்டியிடாவிட்டால்
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் செயல்படாதவையாக அறிவிக்கப்படும். அதேபோல 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக தேர்தலில் நிற்கவில்லை என்றால் அவை பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும். அதன்படி, 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் இருந்த 86 கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் சமீபத்தில் ரத்து செய்தது.

பதிவு ரத்தாகும்
இதுவரை பதிவு செய்யப்பட்டு, அங்கீகாரம் பெறாத கட்சிகளையும் செயல்படாத கட்சிகள் என தேர்தல் ஆணையம் அறிவிக்கும். தேர்தலில் பங்கு பெறாத கட்சிகள், வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யாத கட்சிகள், செயல்படாமலேயே உள்ள கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் பட்டியலை மாநில வாரியாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

தமிழக அரசியல் கட்சிகள்
தமிழகத்தில் செயல்படாத கட்சிகள் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய டி.ராஜேந்தரின் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றன. அந்தக் கட்சிகள் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. வருமான வரி தாக்கல் செய்யவில்லை எனவும் தெரியவந்தது. அந்த கட்சிகள் 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அட்ரஸே இல்லை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் 4 கட்சிகள் மட்டுமே விளக்கம் அளித்திருந்தன. தேர்தல் கமிஷன் அளித்த காலக்கெடு முடிந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 233 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 22 கட்சிகள் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றும் தெரியவந்தது. அந்த 22 கட்சி முகவரிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதங்கள், அந்த இடத்தில் அலுவலகமே இல்லாததால் தேர்தல் ஆணையத்திற்கே திரும்பி வந்துள்ளன.

செயல்படாத கட்சிகள்
உரிய கால அவகாசத்தில் விளக்கம் அளிக்காத நிலையில், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்தக் கட்சிகளின் பெயர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், உரிய விளக்கம் மற்றும் வருமான வரி கணக்குகளை அளிக்கும் பட்சத்தில் மீண்டும் பட்டியலில் அந்தக் கட்சிகளின் பெயர் இணைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன?












Click it and Unblock the Notifications