மின்சார ரயில்கள்.. திடீர்னு தெற்கு ரயில்வே பரபரப்பு தகவல்.. இன்றும் நாளையும் நோட் பண்ணுங்க மக்களே
சென்னை: இன்றிலிருந்து 4 நாட்கள் தொடர் விடுமுறை துவங்கி உள்ள நிலையில், தெற்கு ரெயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
ஆயுதபூஜையை முன்னிட்டு, 4 நாட்கள் தொடர் விடுமுறை துவங்கி உள்ளது.. இதனால், முன்கூட்டியே பொதுமக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகிவிட்டனர்.

ரயில்களில் ஏற்கனவே, புக்கிங் நடந்து முடிந்துவிட்டது.. இதனால், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் பயணிகளால் நிரம்பி வழிகிறது.
பயணிகள் கூட்டம்: தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரயில்களிலும் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்போர் பட்டியலும் வேகமாக உயர்ந்தது... இதனால் முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும், கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
இதுஒருபக்கமிருந்தாலும், தற்போது தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.. அந்தவகையில், நாளைய தினம், 23 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
சென்னை சென்டிரல் - கூடூர் வழித்தடத்தில் திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் இன்றும் (21-ந்தேதி), நாளையும் (22-ந்தேதி) ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி: அதன்படி, சென்னை கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 11.20 மணிக்கு புறப்படும் ரெயில் சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு இரவு 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, நாளை மூர்மார்க்கெட்டிலிருந்து சூலூர்பேட்டைக்கு காலை 4.20, 5 மணி, 5.20, 7.30, 7.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டிற்கு காலை 5 மணி, 5.40, 6.40 மணிக்கு புறப்படும் ரெயில் சேவைகள் ரத்தாகிறது.
மூர்மார்க்கெட்டிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 5.40, 6.25, 6.50, 8.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டிற்கு காலை 3.50, 4.50, 5.10, 6 மணி, 8 மணிக்கு புறப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எண்ணூர்: இதேபோல, சென்னை கடற்கரையிலிருந்து பொன்னேரிக்கு காலை 5.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மறுமார்க்கமாக பொன்னேரியிலிருந்து கடற்கரைக்கு காலை 6.45 மணிக்கு புறப்படும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
எண்ணூரிலிருந்து திருவள்ளூருக்கு காலை 6.35 மணிக்கு புறப்படும் ரெயிலும், பொன்னேரியிலிருந்து மூர்மார்கெட்டுக்கு காலை 7.50 மணிக்கு புறப்படும் ரெயிலும், ஆவடியிலிருந்து எண்ணூருக்கு காலை 5 மணிக்கு புறப்படும் ரெயில், திருவள்ளூரிலிருந்து பொன்னேரிக்கு காலை 5.20 மணமணிக்கு புறப்படும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
சிறப்பு ரயில்கள்: மொத்தமாக இன்று 3 ரெயில் சேவையும், நாளை 23 ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக சென்னை மூர்மார்கெட்-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இன்று இரவு 10.45, 11.20 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். நாளை காலை 4.20, 5 மணி, 5.20, 5.40, 6.25, 6.50, 7.30, 7.45, 8.15 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications