காட்டி கொடுத்த ’மை’ தமிழக தேர்தலில் கள்ள ஓட்டு! 25 வெளிநாட்டவர்கள் கைது! சிக்கியது எப்படி? பரபர தகவல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வெளிநாட்டில் குடியுரிமை பெற்று சட்டவிரோதமாக ஓட்டு போட்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. சொந்த நாட்டுக்கு செல்ல விமான நிலையம் வந்த போது கைவிரலில் இருந்த 'மை'யால் அவர்கள் சிக்கியுள்ளனர். இந்தியத் தேர்தல் விதிகளை மீறியதற்காக காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்தது.
இந்தியர்கள் சிலர் வெளிநாடுகளுக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக தங்கி இருப்பதோடு, அந்த நாட்டு பிரஜையாகவும் மாறி குடியுரிமை பெற்று விடுகின்றனர். அவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட்டுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு விடும். அப்படிப்பட்ட வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள், இந்தியாவுக்கு வழக்கம் போல் வந்து சென்று கொண்டு இருக்கலாம்.

வாக்களிக்க முடியாது
ஆனால் இந்தியாவில் நடக்கும் எந்த தேர்தல்களிலும் வாக்களிக்க முடியாது. இந்தியக் குடிமக்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க உரிமை கொண்டவர்கள். வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் இந்த உரிமையை இழக்கின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தால் வாக்களிக்கலாம். இது இந்தியச் சட்டத்தின் பொதுவான நிலை.
வெளிநாட்டுக் குடியுரிமை பெறுவோர் இந்தியக் குடியுரிமையை இழக்க நேரிடும். வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விதிகளை வகுத்துள்ளது. அவர்களின் இந்திய பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும். வாக்களிக்கும் உரிமையும் அதனுடன் பறிக்கப்படும். எனவே வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் ஓட்டு போட உரிமை கிடையாது.
கை விரலில் மை அடையாளம்
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடந்தது. வெளிநாடுகளில் வசித்த தமிழர்கள் பலர் வாக்களிக்க தாயகம் வந்தனர். சொந்த ஊர்களுக்கு வருகை புரிந்த அவர்கள் வாக்களித்தனர். இதன் தொடர்ச்சியாக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஏப்ரல் 23க்குப் பின் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு சோதனைகள் அறிவிக்கப்பட்டன. கைவிரலில் மை உள்ளதா என பரிசோதிக்கப்பட வேண்டும். வெளிநாட்டு குடியுரிமை உள்ளதா என்றும் ஆராயப்பட்டது.
அவ்வாறு கண்டறியப்பட்டோரை காவல்துறையிடம் ஒப்படைக்க ஆணையம் உத்தரவிட்டது. சென்னை, மதுரை விமான நிலையங்களில் சோதனைகள் துவக்கப்பட்டன. குடியுரிமை அதிகாரிகள் பயணிகளை தீவிரமாகச் சோதித்தனர். சென்னை விமான நிலையத்தில் மூன்று பயணிகள் பிடிபட்டனர். அவர்கள் கைவிரலில் வாக்களித்த மை அடையாளம் இருந்தது. ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தன.
மே 7 முதல் 14ஆம் தேதி வரை
கே.கே.நகர், விருகம்பாக்கம் காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டன. விதிகள் தெரியாது வாக்களித்தனரா என விசாரிக்கப்படுகிறது. ஆள்மாறாட்டம் நடந்ததா என்றும் ஆராய்கின்றனர். தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை தொடர்கிறது.
"சென்னை விமான நிலையத்தில் கடந்த மே 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனைகளில், வெளிநாட்டு குடியுரிமை கொண்ட 4 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்களித்தது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சட்டவிரோதமாக ஓட்டு போட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்."
வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications