Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கு சுக்கா போச்சே.. பாஜகவுக்கு 25 சீட்டா.. "கார்த்தி சிதம்பரம்" வேற.. அட ஜெயக்குமாரே சொல்லிட்டாரே

பாஜகவுடன் கூட்டணி, மற்றும் சீட் விவகாரம் குறித்து ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக - அதிமுக உறவு குறித்தும், அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுவது, சீட் விவகாரங்கள் குறித்தும் மூத்த தலைவர் ஜெயக்குமார் சில முக்கிய கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல் கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என்று பேசியிருந்தார்.

பிறகு, அடுத்த சில நாட்களில் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில் அதிமுக தனித்து போட்டியிடும் என்று கூறியிருந்தார்.

 குஷி

குஷி

ஒருவேளை எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டாரா? அப்படியானால் தனித்து போட்டியிடவும் முடிவு செய்துவிடுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.. மேலும், 25 சீட்களை பெறுவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சொல்லி வருகிறார்.. இதனிடையே, பாஜக கூட்டணியை ஜெயக்குமார், சிவி சண்முகம், முனுசாமி போன்றோர் விரும்பவில்லை என்றும் ஒரு பேச்சு உள்ளது.. இந்நிலையில், பாஜக - அதிமுக உறவு குறித்து, முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவருமான ஜெயக்குமார் நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அவரிடம் நம்முடைய சந்தேகங்களை முன்வைத்தோம்.. அவர் நமக்கு தந்த கருத்துக்கள் இதுதான்:

 25 + சீட்கள்

25 + சீட்கள்

"பாஜக என்பது ஒரு தேசிய கட்சி.. அதிமுக தமிழகத்தில் ஒரு பெரிய கட்சி.. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனித்தன்மை என்பது உண்டு.. சித்தாந்தம் உண்டு... இதெல்லாம் ஒருபக்கம் என்றாலும், தோழமையுடன் இருப்பதும், கூட்டணி வைப்பதும் என்பது இன்னொரு பக்க அரசியல் உண்டு.. ஆனால், பாஜகவிடம் நாங்கள் ஆலோசனை கேட்பது என்பதோ அல்லது எங்கள் கட்சி விவகாரத்தில் அவர்கள் தலையீடு என்பதோ கிடையாது.. 25 சீட்டுக்களை அதிமுக கூட்டணியில் தரப்போவதாக பாஜக தரப்பில் சொல்கிறார்கள்.. அதெல்லாம் அனுமானங்கள்...

 ஸ்பெஷாலிட்டி

ஸ்பெஷாலிட்டி

ஒருவேளை தங்கள் கட்சியை பலப்படுத்துவதற்காக பாஜக இப்படி சொல்லலாம்.. ஆனால், நாங்கள் பாஜகவுக்கு கடந்த முறை தேர்தலில் எத்தனை சீட் தந்தோம்? பாமக, பாஜக என எந்த கட்சியாக இருந்தாலும், எங்கள் கட்சியின் தனித்தன்மை பாதிக்காத வகையில்தானே சீட்டுகளை ஒதுக்கினோம்? அவரவர் கட்சியின் பலத்துக்கேற்றவாறுதானே சீட் தந்தோம்? ஆனால், உள்ளாட்சி தேர்தலிலும் அதுபோலவே சீட் கேட்டார்கள்.. அப்போது நாங்கள் தரவில்லை.. அதனால்தான், நட்பு ரீதியில் ஒதுங்கி கொண்டு தனியாக போட்டியிட்டார்கள்..

 கம்பல்ஷன்

கம்பல்ஷன்

எந்தநிலையிலும், எங்களின் தனித்தன்மையை இழக்க மாட்டோம்.. தனித்தன்மையை இழந்து நாங்கள் அரசியலையும் செய்ய மாட்டோம்.. அதேபோல, எதிர்காலத்தில் எங்கள் தலைமையில்தான் கூட்டணி அமையும்.. கூட்டணியில் அமைய போகும் கட்சிகளுக்கு, அவரவர் பலத்துக்கேற்றவாறுதான் சீட்டுகளை தருவோம்.. பாஜகவாக இருந்தாலும் இதுதான் எங்கள் முடிவு.. நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலோ, அல்லது கட்டாயத்தின் அடிப்படையிலோ, அல்லது வேறு வகையிலோ அவர்களுக்கு சீட்டுகளை ஒதுக்க முடியாது.. இது அவங்களுக்கே நல்லா தெரியும்..

 மாயை + அனுமானம்

மாயை + அனுமானம்

"அதிமுக தலைமையிலான கூட்டணி" என்றுதான் இதற்கு முன்பும் நாங்கள் சொன்னோம். அதனால், 25, 30 சீட்டுக்கள் என்று சொல்வதற்கு பாஜகவுக்கு உரிமை உள்ளது.. இன்னும் கூட்டணியே முடிவாகவில்லை.. கூட்டணி சமயத்தில் சீட் விவகாரம் உருவாகும்போதுதான், இதை பற்றி பேச முடியும்.. இப்போதே எல்லாவித அனுமானங்களுக்கும் பதில் சொல்ல முடியாது.. திமுகவுக்கு எதிரான கட்சி பாஜக, திமுகவுக்கு மாற்று பாஜக, அதிமுகவின் இடத்தை பாஜக பிடித்துவிட்டது என்று சொல்வதெல்லாம் ஒரு மாயை.. எந்த கட்சிக்கு களத்தில் பலம் அதிகம் என்பது மக்களுக்கே கண்கூடாக நன்றாக தெரியும்..

 கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸில் இருக்கும் கார்த்தி சிதம்பரமே சொல்றாரே, "அதிமுகவை ஒன்றும் சாதாரணமாக எடைபோட்டுடாதீங்க.. கிராமங்கள் வரையில் ஒரு கட்சி போய் சேர்ந்திருக்கிறது என்றால் அது அதிமுகதான்" என்று சொல்லி உள்ளார்.. அந்தவகையில், ஒரு லட்சம் கிளைகள் கொண்ட மாபெரும் இயக்கம் எங்கள்.. அதுக்கான விதையை தலைவரும், அம்மாவும் விதைத்து விட்டு சென்றுள்ளார்கள்.. எனவே, பாஜகவோ, பாமகவோ, விசிகவோ, கம்யூனிஸ்ட்களோ, தங்கள் கட்சிகளை பற்றி எவ்வளவோ சொல்லி கொள்வார்கள்.. நாங்களும் ஆட்சியை பிடிப்போம் என்று அன்புமணி சொல்லலையா? ஆனால், சிறந்த நீதிபதி மக்கள்தான்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+