62.கிமீக்கு சென்னையில் நடக்க போகும்.. தரமான சம்பவம்.. இன்ச் இன்ச்சா செதுக்க போறாங்க.. கவனம்!
சென்னை: சென்னையில் பாதசாரிகள் எளிதாக நடக்கும் வகையில் மாற்று நடவடிக்கையாக, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் (CUMTA) தனது 25 ஆண்டு கால விரிவான போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் பல மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளது.
ஏழு பகுதிகளாக சென்னையை பிரித்து 62 கி.மீ., தூரத்துக்கு நடைபாதைகளை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த குழுக்களில் நந்தம்பாக்கம், அம்பத்தூர், சூளைமேடு, அசோக் நகர், அரும்பாக்கம், வியாசர்பாடி மற்றும் வில்லிவாக்கம் ஆகியவை அடங்கும். இதில் அசோக் நகர் மற்றும் வியாசர்பாடியில் தலா 15 கி.மீ., தூரத்துக்கு நடைபாதைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

இந்த இடங்கள் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகாமையில் இருக்கும். பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்துக்கான அணுகல் மற்றும் அதிக பாதசாரி விபத்து நடக்கும் இடங்கள் ஆகிய மூன்று அளவுகோல்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன.
மோசமான பராமரிப்பு
தற்போது, இந்த பகுதிகளில் உள்ள பெரும்பாலான நடைபாதைகள் 1.2 மீட்டர் அகலம் மட்டுமே கொண்டு மோசமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. புதிய வடிவமைப்புகள் அவற்றை 1.8 மீட்டராக அகலப்படுத்தும், இது இருவழி பாதசாரி இயக்கத்திற்கும், சக்கர நாற்காலி அணுகலுக்கும் உதவும். ஜிஎஸ்டி சாலை போன்ற எதிர்கால தார் சாலை மேம்பாடுகளுக்கு 2.5 மீட்டர் அகலம் வரை நடைபாதைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.
மொத்தமுள்ள 62 கி.மீ., தூரத்தில் 17 கி.மீ., தூரத்திற்கான பூர்வாங்க மதிப்பீடுகளை கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் முடித்துள்ளது. இந்த திட்டங்களில் கைப்பிடிகள், கிரானைட் நடைபாதைகள் மற்றும் தடுப்புகள் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒன்பது மண்டலங்களில் உள்ள 23 சாலைகளின் ஆய்வுகள் முடிந்துவிட்டன, பருவமழை நிலைமைகளை கணக்கில் கொண்டு விரைவில் கள ஆய்வு தொடங்கும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பாதசாரிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் (CUMTA), 25 வருடங்களுக்கான விரிவான போக்குவரத்து திட்டத்தை (Comprehensive Mobility Plan - CMP) உருவாக்கி வருகிறது.
சென்னையின் போக்குவரத்து நெரிசல் மற்றும் தீர்வுகள்
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதுடன், சாலைப் பாதுகாப்பை அதிகரிப்பதாகும். இதுகுறித்து CUMTA தரப்பு கூறுகையில், "சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பாதசாரிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், திட்டங்களை கொண்டு வர உள்ளோம். பொதுப் போக்குவரத்து விருப்பங்களை ஊக்குவிப்பதும், கடைசி மைல் வரை தடையற்ற இணைப்பை வழங்குவதும்தான் எங்கள் முக்கிய குறிக்கோள்," என்றுள்ளனர்.
CUMTA என்பது, தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் ஒரு பிரிவு ஆகும். இது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 5904 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், போக்குவரத்து தொடர்பான அனைத்து துறைகள் மற்றும் ஏஜென்சிகளுக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரமாக விளங்குகிறது. இந்த குழுவில், தனியார் சந்தையில் இருந்து பணியமர்த்தப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகளில் இருந்து வந்த அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர்.
CMP திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த பிராந்தியத்தில் 50,000 வீடுகளில் CUMTA ஆய்வு நடத்தியது. இதன் மூலம், இந்த மாஸ்டர் பிளானுக்கான உள்ளீடுகளைப் பெற முடிந்தது. இதுகுறித்து CUMTA கூறுகையில், "அடிப்படையாக, மக்களின் பயண முறை, அவர்கள் எப்படி பயணிக்கிறார்கள், எந்த முறைகளைப் பயன்படுத்துகிறார்கள், அமைப்பில் உள்ள இடைவெளிகள் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்காகவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நிறைய தரவுகளின் அடிப்படையில் ஆய்வைச் செய்து திட்டங்களை கொண்டு வர உள்ளோம், என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications