கோயம்பேட்டில் ஒரே கூட்டம்.. இன்று கூடுதலாக 250 பஸ்கள் இயக்க ஏற்பாடு.. வந்தது ஸ்பெஷல் அறிவிப்பு
கூடுதலாக சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று முதல் 250 பஸ்களை இயக்க முடிவு
சென்னை: இன்று சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு மேலும் கூடுதலாக 250 பஸ்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது.. இதனால் சொந்த ஊருக்கு செல்வதற்காக முன்பதிவுகளில் மக்கள் கடந்த மாதமே இறங்கிவிட்டனர்.. அதிலும் சென்னைவாசிகள், ரெயில்களில் முன்பதிவு செய்துவிட்டனர்..
சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள், மற்றும் கோவை, சேலம் மார்க்கமாக செல்லக் கூடிய அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன...

ரிசர்வேஷன்
தீபாவளிக்கு முந்தைய 21, 22, 23 ஆகிய தேதிகளில் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டதால், வேறுவழியில்லாமல் அரசு பஸ்களை நாடி செல்கிறார்கள். அரசு விரைவு பஸ்களிலும், தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.. தமிழகம் முழுவதும் 450 அரசு விரைவு பஸ்களுக்கு பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.. அரசு விரைவு பஸ்களில் இடங்கள் நிரம்பி விட்டன...

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு
குறிப்பாக சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, செங்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக் கூடிய அரசு பஸ்களில் இடங்கள் நிரம்பி விட்டன. பகல் நேர பஸ்களில் மட்டுமே இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டன. கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு செல்லும் 250 அரசு விரைவு பஸ்களில் 22, 23 ஆகிய தேதிகளுக்கு இடங்கள் இல்லை... ஆம்னி பஸ்களிலும் கட்டணம் அதிகம் என்பதால், ஏழைமக்களால் அதில் பயணம் செய்ய தயக்கம் காட்டுகிறார்கள்...

ஸ்பெஷல் பஸ்
அதனால் இன்று, (20-ந் தேதி) பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்... சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருப்பதால் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட 2100 கூடுதலாக 250 பஸ்களுடன் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. அதாவது, 3 நாட்கள் சிறப்பு பஸ்களில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து இன்று வெளியூர் செல்ல 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

கோயம்பேடு
அதனால்தான், இன்று கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் நாளை முதல் 6 பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.. ஒருபக்கம் ரயில்கள், இன்னொருபக்கம் அரசு பஸ்கள் நிரம்பி வழிந்தாலும், ஆம்னி பஸ்களின் கட்டண கொள்ளையும் ஜரூராக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications