2663+.. லாஸ்ட் ஆப்ஷன் இதுதான்.. ரகசியத்தை உடைத்த ஓபிஎஸ் டீம்.. எடப்பாடிக்கு வேறு வழியேயில்லையா?
எடப்பாடியை வழிக்கு கொண்டுவர ஓபிஎஸ் டீம் கொடநாடு விவகாரத்தை கையில் எடுக்கிறது
சென்னை: எடப்பாடி பழனிசாமியை வழிக்கு கொண்டுவர கொடநாடு விவகாரத்தை ஓபிஎஸ் டீம் கையில் எடுக்க போவதாக தகவல்கள் கூறுகின்றன.
Recommended Video
ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.. ஆனால், எடப்பாடி அதை ஏற்கவில்லை.. அப்பீலுக்கு சென்றுள்ள நிலையில், ஓபிஎஸ் மீதான கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதனால், ஓபிஎஸ் - எடப்பாடி இருவரும் இணைந்து செயல்படுவது கடினம் என்றே தெரிகிறது.. ஆனால், எடப்பாடி இல்லாமல், ஓபிஎஸ்ஸால், அவ்வளவு பெரிய கட்சியை நடத்தவும் முடியாது என்கிறார்கள்.

மோசமான நிலைமை
ஆதரவும், பலமும் குறைவாக இருப்பதால், எடப்பாடியையே அவர் நம்பியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது... அதேசமயம், இரு தரப்பிலுமே ஈகோ வெடித்து கிளம்பி உள்ளது.. யார் யாருக்கு விட்டுத்தர போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.. இதில் ஓபிஎஸ்ஸைவிட எடப்பாடி மிகவும் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.. என்னதான் டெல்லி ஆதரவு ஓபிஎஸ்ஸுக்கு இருந்தாலும், எடப்பாடியை தன்வசம் கொண்டு வர அவரால் முடியாது என்கிறார்கள்.

பலவீனம்
இந்த சூழலில்தான், ஒருவேளை எடப்பாடி, இணங்கி வர சம்மதிக்காவிட்டால், கொடநாடு வழக்கை கையில் எடுத்துவிட வேண்டியதுதான் என்று ஓபிஎஸ் டீம் யோசிக்கிறதாம்.. எப்போதுமே எடப்பாடியை பலவீனப்படுத்த வேண்டும் என்றால், அவர்மீதான புகார்கள் அல்லது அவரது ஆதரவாளர்கள் மீதான வழக்குகளை தூசி தட்டி எடுப்பது வழக்கமான அரசியல்.. அதைதான் இந்த முறையும், தோண்டி எடுப்பதாக கூறுகிறார்கள்.. ஆனால், இதற்கெல்லாம் எடப்பாடி விழுந்துவிட மாட்டார் என்கிறார்கள்.. ஓபிஎஸ் அல்லது பாஜக மேலிடம், இந்த ரூட்டைதான் எடுப்பார்கள் என்பதை முன்கூட்டியே யோசிக்காமல் இல்லை..

அப்பாயிண்ட்மென்ட்
டெல்லியில் தலைவர்களை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கிடைக்காதபோதே, பாஜகவும் சரி, திமுக அரசும் சரி, இந்த திட்டத்தைதான் கையில் எடுப்பார்கள் என்பதையும் நன்கு அறிந்திருந்தாராம்.. மற்றொருபக்கம், ஓபிஎஸ் மீதான நல்லெண்ணங்கள் இணையத்தில் அவரது தொண்டர்களாலேயே பதிவிடப்பட்டும் வருகிறதாம்.. அதாவது, ஓபிஎஸ் எவ்வளவுதான் இணங்கி வந்தாலும், எடப்பாடி தான் இப்போது முரண்டு பிடிக்கிறார், என்ற வாதத்தையும், ஓபிஎஸ் தரப்பினரே சோஷியல் மீடியாவில் முன்வைத்து வருவதாகவும் தெரிகிறது.

+ 2663
இதற்கு நடுவில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மீண்டும் சீண்டி விட்டு எடப்பாடி தரப்பை கொந்தளிக்க விட்டுள்ளார்.. "2663 பேரை பிடித்து வைத்துக் கொண்டு சர்க்கஸ் காட்டுகிறார் எடப்பாடி. பயாஸ்கோப் காட்டுகிறார்.. நல்ல மனதோடு எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று ஓபிஎஸ் அழைத்தார்... எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்தார்... தொண்டன் தலைவராவார்.. தொண்டன் முதல்வராவார்... என்றால் பழனிச்சாமி நீ விட்ரு.. வெளியே வந்துரு... வேற ஒரு ஆளை ஒற்றை தலைமைக்கு நியமனம் செய்.

மொத்த உருவம்
நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சாதாரண ஒரு தொண்டன் வரட்டும்.. நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அவர் இதைச் செய்ய மாட்டார். ஏனென்றால் பதவி வெறியின் மொத்த உருவம் தான் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வரிடம் மன்றாடி கேட்டுக் கொண்டிருக்கிறோம் . கொடநாடு வழக்கை துரிதமாக செயல்படுத்துங்கள். ஜெயிலுக்கு போறவங்க ஜெயிலுக்கு போகட்டும் வெளியே இருக்கிறவங்க வெளியே இருக்கட்டும் என்று சொல்கிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.

2633 பேர்
2633 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பக்கம் இருப்பதை சொல்லும் ஓபிஎஸ் தரப்பு, தன் பக்கம் எத்தனை உறுப்பினர்கள் என்பதை ஏன் சொல்லவில்லை என்று கேட்கிறார்கள் எடப்பாடி தரப்பு.. கொடநாடு விவகாரத்தை இத்தனை காலமாக ஏன் ஓபிஎஸ் தரப்பு எடுக்கவில்லை, ஒன்றாகவே எடப்பாடியுடன் சேர்ந்து பயணித்தது ஏன் என்ற கேள்வியையும்முன்வைக்கிறார்கள்..

தேன்கூடு + கோட்டை
ஒருபக்கம் கொடநாடு விவகாரம் என்றால், மறுபக்கம் ஆட்களை இழுக்கும் வேலையும் அதற்காக தூது விடும் வேலையும் நடந்து வருகிறதாம்.. இப்போது எடப்பாடிக்கு என்ன சிக்கல் என்றால், தன்னிடம் உள்ள மொத்த ஆதரவாளர் பலத்தையும் இழந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதே.. தேன்கூட்டை கலைத்துவிட்டால், கட்சி கரைந்து காணாமல் போகவும் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications